வம்பான டிரம்ப் அவர்களுக்கு
வம்பான டிரம்ப் அவர்களுக்கு
அய்யன்மீர் நீர் அமெரிக்காவுக்கு நல்லது செய்கின்றீரா இல்லையா என்பது எமக்கு தெரியாது , ஆனால் உம்மால் ஒரு உதவியினை எமக்கு செய்யமுடியும்
விஷயம் ஒன்றுமில்லை, இந்த ஜின்பெங் வருவதால் பல கோடிகளை செலவழித்து மாமல்லபுரம் ஏரியாவினை உங்கள் நியூயார்க் அளவுக்கு மாற்றி வைத்திருகின்றார்களாம், சாலைகள் பளபளக்கின்றன, எங்கும் தூய்மை இன்னபிற அவசரமான நடவடிக்கைகள்
எங்கள் பக்கம் ரோடு சரியில்லை , அரச அமைப்புகள் இயங்கவில்லை எதுவுமே சரியில்லை. நாங்கள் தொலைதூர பகுதி என்பதால் வாக்கு வங்கி இல்லா பகுதி என்பதால் மாநில அரசும்கண்டு கொள்ளாது, மத்திய அரசு ஒருபோதுமில்லை
ஆக எங்களுக்கு உதவ உங்களால் மட்டுமே முடியும், உடனே மோடிக்கு போன் செய்து அவரை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சந்திக்க விரும்புவதாக அடம் பிடியுங்கள்
அவர் மறுப்பார், ஆனால் நீங்கள் விடாபிடியாக நின்று வள்ளியூர்தான் வேண்டும் என அடம்பிடித்து வந்து எங்களுக்கான வசதிகளை பெற்று தருமாறு கேட்டுகொள்கின்றோம்
வந்து போகும் செலவினை கூட நாங்கள் தந்துவிடுவோம்
நீர் இந்த உதவியினை செய்தால் உங்களின் குடும்பமும் முன்னாள் மனைவியர் குடும்பமும் வாழும், டிரம்ப் டவர் 200 மாடி உயரத்துக்கு எழும்பும்
நீர் உலகை காப்பீரோ இல்லையோ எங்களை தயவு செய்து காக்க வந்து செல்லவும். உம்மால் முடியாவிட்டால் அந்த புட்டீனுக்கு இந்த கடிதத்தை அனுப்பி உதவவும்..
