பலர் சேர்ந்து வருவோம்

சீனாவின் குவாங்சூ நகரில் எமக்கொரு சக அலுவலர் உண்டு, அவர் சீன மக்கள் குடியரசின் குடிமகன் , கொஞ்ச நாளில் எம்மோடு பணியாற்றினார் பின்பு குவாங்சூ அலுவலகத்திற்கு சென்றுவிட்டார், நேற்று மனிதர் கடும் உற்சாகம்

“ஹேலோ ஸ்டேன் லீ.. இந்தியாவில் மம் மல் புரம் எங்க இருக்கு?

அது மாமல்லபுரம், இந்தியாவில் நம் மாநிலத்தின் ஊர், சீனாவுக்கு அதற்கும் தொடர்பு அதிகம்

இங்கு எல்லோரும் எங்கள் அதிபரின் சுற்றுபயணத்தை பார்த்துகொண்டிருகின்றோம், அந்த சிற்பங்களும் கடலும் அவ்வளவு அழகு

ஆம், அவை வரலாற்று பொக்கிஷங்கள்

இம்மாதிரி இடங்களுக்கு எங்கள் அதிபர் செல்வது சந்தோஷம், விரைவில் நிறைய சீன மக்கள் அங்கு சுற்றுபயணம் வருவார்கள், அந்த ஊர் மிகவும் இங்கு விளம்பரமாயிற்று

உங்கள் அதிபரின் வருகைக்கு நன்றி, அவரால் இது சாத்தியம்

உங்கள் பிரதமர் ஒரு உடை அணிந்திருந்தாரே அது என்ன?

வேட்டி சட்டை , எம் தமிழர் உடை

உங்கள் பிரதமரின் எளிமை வியக்க வைக்கின்றது, உங்கள் உடையினை அணிந்து உலகமே உற்றுபார்க்கும் ஒரு சந்திப்பில் கலந்துகொள்வது ஆச்சரியமானது. ஐரொப்பியரும் அரேபியரும்தான் இப்படி இருப்பார்கள்

ஓஹோ

ஆம் எங்களின் ஜின்பெங் கூட எம் நாட்டு பாரம்பரிய உடை அணியமாட்டார், நீங்கள் நல்ல பிரதமரை பெற்றிருக்கின்றீர்கள்

நன்றி

உங்கள் நாட்டை பற்றிய நல்ல அபிமானம் இங்கே வருகின்றது, குறிப்பாக மம் மல் புரம் எல்லோரும் தேடும் ஊர் ஆகிவிட்டது, உலக அளவில் உங்கள் பிரதமர் அதை கொண்டுவந்துவிட்டார்

நன்றி

நானும் அந்த ஊருக்கு விரைவில் வருவேன், பலர் சேர்ந்து வருவோம்

வாருங்கள், நாங்களும் உங்கள் தேசத்திற்கு வருகின்றோம்

நன்றி

இந்தோ சீனா பாய் பாய்

ஆம் “வோ மென் ஷி ஷோங்டி” (நாம் சகோதரர்கள்)

சிய சிய (நன்றி)