சென்னையில் இருந்து ஏன் மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவில்லை
சீன அதிபர் நல்லபடியாக வந்துவிட்டு சென்றாலும் அவர் சென்னையில் இருந்து ஏன் மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவில்லை, பயமா ? இல்லை வேண்டுமென்று காவல்துறையினை அலைகழித்தாரா? என ஏக விவாதம்
இதில் மோடியின் பங்கு எதுவுமில்லை, ஜின்பெங்கினை இயக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு அது
சீன புரட்சியின் பொழுது சீனா எங்கும் நடந்தே சுற்றினான் மாவோ, அதனால் ஆட்சிக்கு வந்தபின்பும் சீன அதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மேலிட உறுப்பினர்கள் மன்னர் போல் இருக்க கூடாது, மக்கள் இருக்கும் இடமெல்லாம் சாலைபயணமே மேற்கொள்ள வேண்டும் அதுதான் மக்களின் நிலையினை அறிய உதவும் என்பது அவர்கள் வகுத்தை விதி
இதனால் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் பிரத்யோக காரோடு செல்வார் சீன அதிபர், காரிலே பயணிப்பார் மக்களையும் வாழ்க்கை தரத்தையும் பார்த்து கொண்டே செல்வார்
ஒருவேளை மாமல்லபுரம் பயணத்தின் பொழுது என்ன நினைத்திருப்பார்?
“நம் நாட்டில் புரட்சியாளன் மாவோ போல காஞ்சியில் அண்ணா அண்ணா என்றொருவர் இருந்ததாக சொன்னார்கள், அவர் அப்படி எல்லாம் புரட்சி செய்ததாக தெரியவில்லை இனி இந்த தமிழக கம்யூனிஸ்டுகளிடம் கவனமாக இருக்க வேண்டும்..” என எண்ணியிருக்கலாம்