அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார்

இம்ரான்கான் இப்பொழுதெல்லாம் உலக பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரு காட்சி தெரிகின்றது, அதாவது அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார்

அந்த இருவரும் முன்பு தமிழக ராமசந்திரன் ஜாணகி ஜெயா என இரு பெண்களை அழைத்து கொண்டு சுற்றியதை போல இரு மனைவியராய் இருந்தால் சிக்கல் இல்லை இங்கோ இரு மகா சக்திவாய்ந்த ஆசாமிகள் என்பதுதான் சிக்கல்

ஆம் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்னொருவர் ஐ.எஸ்.ஐ தலைவர்

இந்த இருவர் இம்ரான்கான் எங்கு சென்றாலும் கூடவே செல்கின்றனர், ஆனால் அரச சந்திப்புகளில் தலைகாட்டுவதில்லை தள்ளி இருந்து இம்ரானை பார்க்கின்றனர், இம்ரானும் அவர்களை பார்த்துகொண்டே இருக்கின்றார்

விஷயத்தை உலகம் இரு சாத்தியங்களில் சொல்கின்றது

முதலாவது ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் இம்ரான் கானை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து சென்று மற்ற நாடுகளிடம் ஆள்வது இவர்தான் ஆனால் ஆட்சி எம்முடையது என சொல்லாமல் சொல்கின்றன‌

இரண்டாவது நாம் வெளிநாட்டுக்கு சென்றால் இந்த இரண்டு சனியன்களும் சேர்ந்து ஆட்சியினை கவழ்த்துவிட்டு நம்மை வெளிநாட்டிலே தங்க வைத்துவிடும் அதனால் கூடவே அழைத்து செல்வோம் என தன் கண் அசைவிலே அவர்களை வைத்திருக்கின்றார் இம்ரான்கான்

இந்த இருவிஷயங்களுமே சாத்தியம் என்பதால் இரண்டுக்குமே சாத்தியம் இருக்கலாம், அந்த இம்ரான்கான் கொஞ்சம் பரிதாபமாகவே தெரிகின்றார் பாவம்

பாகிஸ்தானை பொறுத்தவரை அந்த பசும்பொன் தேவர் சொன்னதுதான் சரி

“பாகிஸ்தான் வேண்டும் என‌ கேட்டவனும் முட்டாள், அதை கொடுத்தவனும் முட்டாள். இரு முட்டாள்களும் சேர்ந்து முட்டாள்தனமான ஒரு தேசத்தை உருவாக்கிவிட்டார்கள் “