Subasree Mohan

சகோதரி Subasree Mohan முகநூல் மூலமாக நமக்கு நண்பரானார், அவர் வசிப்பது சீனாவில் காரணம் அவரின் கணவர் இந்திய சீன கலாச்சார குழுவில் மகா முக்கியமான நபர்

சகோதரி மிகசிறந்த வாசிப்பாளர், தேர்ந்த உலக ஞானமும் அறிவும் கொண்டவர். சீனாவில் தான் சந்தித்த அனுபவங்களை “சீனா நம் சகோதரன்” என புத்தகமாக எழுதினார் , அது சீன அரசின் அனுமதியுடன் ஆங்கிலத்தில் உலகெல்லாம் சுற்றியது

தமிழகத்தில் பல பத்திரிகைகளில் புத்தகத்தின் கட்டுரைகள் வந்தன‌

இந்திய சீன தொல்லியல் முதல் இன்றைய உறவு குறித்து விளக்கமாக சொல்லும் தமிழக புத்தகம் இன்றுவரை அதுதான்

சகோதரியிடம் இருக்கும் மிகபெரும் நற்குணம் நம்மையும் மதித்து பேசுவது, சீனா சம்பந்தபட்ட எல்லா விவரங்களையும் அதாவது எதை பேசமுடியுமோ அதை மிக துல்லியமாக விளக்குவார்.

அவர் சீனா பற்றி பேசும் பொழுது ஒரு குழந்தைக்கான வியப்பும் அவர் கேட்கும் பொழுது ஒரு நிபுணருக்கான கவனமும் இருக்கும்..

அந்நாட்டையும் அரசியலையும் வாழ்க்கைமுறையினையும் பற்றிய மகா துல்லிய அறிவு அவருக்கு இருக்கின்றது

நாமும் சீன கலாச்சாரத்தை கூர்ந்து கவனிப்பதாலும் இந்துமதம் என்பது இயமலையினையொட்டி வளர்ந்த மதம் என்பதால் அதன் தாக்கம் சீன கலாச்சாரத்திலும் நிரம்ப இருப்பதை உணர்வதாலும் அவரிடம் சில விளக்கங்களை கோருவோம், தயங்காமல் விளக்குவார்.

அவர் பரிபூரண இந்து சாஸ்திர ஞானியாக இருப்பதால் அவருக்கு அந்த தொடர்புகள் நூல் பிடித்தது போல் அட்டகாசமாக சரம் சரமாக வரும்

அவர் சைவம் என்பதால் சீன உணவின் ருசி ஒன்றுமட்டும் அவருக்கு தெரியாது, அதை தவிர வேறு எல்லா விஷயமும் அத்துபடி மாண்டரின் உட்பட..

தமிழ் மொழியின் வார்த்தைகள் கூட மாண்டரினில் அப்படியே பொருள்பட உணடு, அம்மாதிரி ஆய்வுகளில் எல்லாம் அம்மணி தேர்ந்த அனுபவம் நிறைந்தவர்.

ஒரு தமிழ்குடும்பம் சீனாவின் கலாச்சார மையத்தில் இடம்பிடித்து சீன உறவினை கரம்பிடித்து வருவது வாழ்த்துகுரிய விஷயம்..

மிக சரியான நேரத்தில் அத்தம்பதியரை சன்டிவி அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை உலகறிய செய்திருகின்றது

அம்மணிக்கு வாழ்த்துக்கள், இன்னும் பல புத்தகங்களையும் ஆய்வுகளையும் சீனமண்ணில் அவர் செய்யவும் மறைந்து போன பல தொடர்புகளை அவர் மீட்டெடுக்கவும் வாழ்த்துக்கள்

பாஜக அரசு பல ஆச்சரியங்களை வேடிக்கையாய் நிகழ்த்தும் அரசு, பல்வேறு வகையான அதிரடி ஆச்சரியங்களை அது கொடுக்கும்

நிர்மலா சீத்தாராமன் அமைச்சரானது, தமிழிசை அக்கா கவர்ணரானது எல்லாம் அப்படித்தான்

அவ்வகையில் சகோதரி ஒருநாள் சீனாவுக்கான இந்திய‌ தூதர் ஆகலாம், அதற்கான முழு தகுதி அவரிடம் நிரம்ப இருக்கின்றது, இவர் விஷயத்திலும் பாஜக அந்த அதிசயத்தை எதிர்காலத்தில் நிகழ்த்தலாம்..