திமுக குடும்பம் என்றைக்கு கொள்கையும் செயலும் ஒன்றாய் இருந்தது?

திமுக குடும்பம் என்றைக்கு கொள்கையும் செயலும் ஒன்றாய் இருந்தது?

பண்ணையாரின் நிலம் உழைப்பவனுக்கு என பிடுங்கி கொடுப்பார்கள் ஆனால் முரசொலியும் சன்டிவியும் இன்னபிற நிறுவணங்களில் இருந்து சல்லி பங்கு பணியாளருக்கு செல்லாது

உழைப்பவன் உழைத்து கொண்டே இருக்கவேண்டுமா என்பார்கள் ஆனால் திமுகவின் தொண்டன் மட்டும் அப்படியே இருப்பதில் அவர்களுக்கோர் மகிழ்ச்சி

அப்படிபட்ட குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் புரட்டாசி கடைசி சனிக்கு திருப்பதிக்கு சென்றதில் என்ன ஆச்சரியம்?

தயாளு அம்மாவுக்கு தன் கணவன் முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது, ராசாத்தி அம்மாளுக்கும் இருந்தது அவர்கள் போக்கில் இருந்தார்கள்

துர்க்கா அம்மையாருக்கு அந்த நம்பிக்கை இல்லை, அதனால் தெய்வமே அவரை முதல்வராக்கு என கிளம்பிவிட்டார்.

இன்னும் முக ஸ்டாலின் முதல்வராவது தாமதமானால் உதயநிதி இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார், பொறுத்து பாருங்கள்..

ஆனால் எம்மை பொறுத்தவரை இன்று தமிழகத்தின் அசாத்திய துணிச்சல் மிக்க பெண்மணி துர்கா ஸ்டாலின் என்பவர்தான்.

கணவன் , கணவனின் குருநாதர்களான வீரமணி கோஷ்டி அதன் பின்னால் இருக்கும் பல சக்திகள் என எல்லோரையும் பார்த்து “போங்கடா டேய்..” என சொல்லிவிட்டு காசிக்கும் திருப்பதிக்கும் செல்ல தனி துணிச்சல் வேண்டும்

பழனிச்சாமி அந்த வீரதிர செயலுக்கான விருதை துர்கா ஸ்டாலினுக்கு வழங்கலாம்

ஏன் நல்லவராக இருந்தால் “பெரியார்” விருதினை துர்கா ஸ்டாலினுக்கே வீரமணியும் வழங்கலாம்,

அடக்குமுறைகளை உடைத்தெறிந்து தான் விரும்பிய காரியத்தை மகா துணிச்சலாக செய்யும் துர்கா ஸ்டாலினுக்கு பெண் விடுதலைக்கான பெரியார் விருதை கொடுக்காவிட்டால் எப்படி?