கலாம் இந்திய தேசத்தை காத்துகொண்டே இருப்பார்
அந்த கலாமின் உழைப்பும் அர்பணிப்பும் எந்நாளும் போற்றதக்கது
ஹிட்லருக்கு வார்ன் பிரவுண் கிடைத்தான் பின் அவனை அமுக்கி கொண்டு சென்ற அமெரிக்கா ஏவுகனை நுட்பத்தில் உச்சம் தொட்டது, அமெரிக்க ஏவுகனைகளும் ராக்கெட்டும் வார்ன் பிரவுண் நினைவினை தாங்கியே செல்கின்றது
ரஷ்யாவின் ஏவுகனை யுகத்தை தியோஸ்கி தொடங்கி வைத்தான் , டிரப்பல்லோவ் அதை மேம்படுத்தினான், ரஷ்யாவின் எஸ் 500 வரை அவன் பெயரை சொல்கின்றன
இந்தியாவுக்கு அப்படி கிடைத்த அற்புத விஞ்ஞானி கலாம், அக்னி முதல் ஆகாஷ் வரை அவர் பெயரை எக்காலமும் சொல்லும்
பாஜக மேல் அல்லது மோடி மேல் எமக்கு என்ன மரியாதை என்றால் கலாமின் நாட்டுபற்றை அறிந்து அவரின் சிறப்பினை அறிந்து அவரை குடியரசு தலைவராக்கியது
மோடி அரசு கலாம் வரிசை ஏவுகனைகள் என ஒரு வரிசைக்கே என பெயரிட்டது, ஆம் மிக அழகான உருக்கமான நினைவாஞ்சலி அது
ராமேஸ்வரம் எனும் தீவின் கரையில் கடலையும் வானத்தையும் பார்த்து பார்த்து , அந்த வானத்து பறவைகளை பார்த்து பார்த்து தன் பறக்கும் கனவினை வளர்த்தவர் கலாம்
இதனால் கடலில் இருந்து பாயும் ஏவுகனைகளுக்கு K- Series என பெயரிட்டது இந்தியா
ராமேஸ்வரம் கடற்கரை கொடுத்த அந்த நாயகனுக்கு கடலில் இருந்து வரும் ஏவுகனைகளை அவன் பெயரில் அழைப்பதே சால சிறந்தது
அந்த K ரக ஏவுகனைகள் இந்தியாவினை எக்காலமும் காக்கும், அதில் கலாம் இந்திய தேசத்தை காத்துகொண்டே இருப்பார், அவருக்கும் அவரின் தேச சேவைக்கும் எல்லையே இல்லை.
