பிரபாகரனுக்கு ராஜிவ் கொலையும் ஆயிரத்தில் ஒன்றாகவே பட்டது

ராஜிவினை நாம் கொல்லவில்லை என சொல்லியிருக்க வேண்டியவன் திருச்சி வேலுசாமி அல்ல மாறாக பிரபாகரன்

ராஜிவுக்கு பின் அவனுக்கு 18 ஆண்டுகால அவகாசம் இருந்தது, அவன் நினைத்தால் பேரரிவாளனை காத்திருக்கலாம் , இன்னும் யார் யாரையோ காப்பாற்றி இருக்கலாம்

அக்கொலைக்கு பின்னரான 18 மாவீரர் உரையில் ஒரு இடத்திலும் அவன் ராஜிவ் கொலையினை சொல்லவும் இல்லை அதுபற்றி பேசவுமில்லை

அகம்பாவத்தின் உச்சியில் இருந்தான் பிரபாகரன், தான் செய்தது சரி என மனமார நம்பினான். 7 பேர் சாவதை பற்றியோ லட்சகணக்கான தமிழர்கள் சாவதை பற்றியோ அவனுக்கு கவலை இல்லை

தன் அகம்பாவத்தில் மகிந்தாவினை ஆட்சிக்கு கொண்டுவந்தவனும் அவனே, அதே அகம்பாவத்தில் நார்வே குழுவினை விரட்டிவிட்டு ஆண்டன் பாலசிங்கத்தை விரட்டியவனும் அவனே

அவன் தமிழ்நாட்டு திராவிட கும்பலையும் தமிழ்தேசிய அழிச்சாட்டியங்களையும் நம்பினான், தனக்கு ஆபத்தென்றால் அவை காப்பாற்றும் என நம்பினான்

அமைதிபடை காலங்களை போல 2009ல் தமிழகம் தன்னை காக்கும் என நம்பினான்

தான் தமிழக திராவிட வரம்பெற்ற கடவுள் எனவும் தன்னை அழிக்க யாராலும் முடியாது என மனமார நம்பினான், அந்த நம்பிக்கையில் இந்திய தலைவரை கொன்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெறும் 30 கிமீட்டரில் அவனால் உல்லாசமாக இருக்க முடிந்தது

ஆயிரகணக்கான கொலைகளை செய்தபிரபாகரனுக்கு ராஜிவ் கொலையும் ஆயிரத்தில் ஒன்றாகவே பட்டது, ஒருநாளும் அதை தாண்ட அவன் நினைத்ததில்லை அதை பொருட்டாகவே நினைத்ததில்லை

2009ல் அவனுக்கு ஞானோதயம் வந்தது, தமிழக இம்சைகளால் தன் மயிரை கூட காக்கமுடியாது என அவன் உணர்ந்தபொழுது சிங்களன் அவன் மண்டையில் கொத்திகொண்டிருந்தான்