ஆஸ்திரேலிய மனைவி அடேல் பாலசிங்கத்தை மறந்துவிடுகின்றார்கள்
சோனியா எனும் இத்தாலிநாட்டுகாரருக்கு தமிழகத்தில் என்ன வேலை என கேட்கும் அங்கிள் கோஷ்டி எல்லாம், ஆண்டன் பாலசிங்கத்தின் ஆஸ்திரேலிய மனைவி அடேல் பாலசிங்கத்தை மறந்துவிடுகின்றார்கள்,வெள்ளை இனம் எனினும் பாலசிங்கத்தை மணந்து, தமிழ்படித்து ஈழத்து அரசியல்போராளியாய் பல மேடைகளை, விவாதங்களை பலநாட்டு தலைவர்களோடு பெரும் விவாதங்களில் பங்கெடுத்த அவரை மறந்துவிடுவார்கள்.பாலசிங்கம் இறுதிகாலத்தில் ஒதுக்கிவைக்கபட்டதும், அதன் பின் அடேல் பால்சிங்கம் எங்கிருக்கின்றார் என்ன செய்கின்றார் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகால புலிகள் வரலாற்றில் அவரது மகா முக்கிய பங்கு பற்றியும் சிந்திப்பவர் யார்?அங்கிளோ அவரின் அடிப்பொடியோ இதெல்லாம் பற்றி பேசாது, அல்லது பேச தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கலைஞர் துரோகி, சோனியா துரோகிஅயல்நாட்டில் பிறந்தாலும் கணவனின் கொள்கையே தஞ்சமென வாழ்ந்த இந்த சோனியாவிற்கு, அடேலுக்கும் என்ன வித்தியாசம் காணமுடியும்? நிச்சயம் முடியாது.அடேல் பால்சிங்கத்தை இப்பொழுதெல்லாம் பேசவிடுவதில்லை, காரணம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை முன்னமே உணர்ந்து எச்சரித்தும் பயனின்றி ஒதுங்கி கொண்டவர் அவர்,
புலிகளோடு 30 ஆண்டுகள் பழகிய அவரெல்லாம் வாய்மூடிய நிலையில். அரை நிமிடம் பிரபாகரனை சந்தித்த அங்கிள் சைமனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.புலிகளின் முழு ஜாதகமும் அறிந்தவர் அவர்அண்டன் பாலசிங்கம் எனும் மந்திரவாதி வந்தபின்பே புலிகள் விஸ்வரூபம் எடுத்தனர், அவர் மறைந்த பின் புலிகளும் மறைந்தனர்புலிகளின் ஒரே பலம் பாலசிங்கம், அந்த பாலசிங்கத்தின் பெரும் பலம் இந்த அடேல்ஈழம் ஏன் தோற்றது? இறுதியில் என்ன நடந்தது என்பது அடேல் பாலசிங்கத்தின் மனசாட்சியினை தவிர யாருக்கும் தெரியாதுஅவரே அனைத்திற்கும் மவுன சாட்சி, அங்கு நடந்த ஒவ்வொரு அசைவும் அடேலுக்கு அத்துபடிமிக அழகாக தமிழ்பேசுவார் அடேல், பாலசிங்கத்துடனான காதல் அப்படிஅந்த மாபெரும் போராட்டத்தின் பெரும் சாட்சி அடேல் பாலசிங்கமே அமைதியாக இருக்க, இந்த அங்கிள் சைமனும் அவரின் அடாவடி கோஷ்டிகளும் செய்யும் அழிச்சாட்டியம் பெரும் இம்சைகள்இன்றைய தேதியில் ஈழம் குறித்து பேச முழு தகுதி உள்ளவர் அடேல் ஒருவரே, ஆனால் பேசமாட்டார்காரணம் நடந்த அழிவிற்கு தானும் தன் கணவரும் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இருக்கலாம், பிரபாகரனை கட்டுபடுத்த முடியவில்லை எனும் இயலாமையும் விரக்தியும் மிஞ்சி இருக்கலாம்ஒரே ஒருமுறை அடேல் வாய்திறந்தால் அங்கிள் சைமன் தூக்குமாட்டி சாக வேண்டும் என்பதுதான் விஷயம்ஒரு வார்த்தை அவர் “யார் இந்த புது காமெடியன், இவன் ஈழ போராட்டத்தில் இருந்தவனே அல்ல, அதில் துப்பாக்கி துடைத்தவனோ இல்லை போராளிகளுக்கு ஷூ துடைத்தவனோ கூட இல்லையே, இப்படியுமா ஒருவன் பொய் சொல்லுவான், மை காட்” என சொல்லிவிட்டால் அவ்வளவுதான்அங்கிள் சைமன் சயனைடு கடித்துத்தான் அவரை நிரூபிக்க வேண்டும்ஏதோ சைமனின் வாழ்நாளை, இன்னும் இந்த திருமுருகன் காந்தி போன்றோரின் வாழ்நாளை நீட்டித்து கொண்டிருக்கின்றார் அந்த அடேல் பாலசிங்கம்