உண்மையான யுத்தத்தை சந்திக்கமுடியா கோஷ்டி மல்லாக்க விழுந்தது
இந்திய அமைதிபடை செல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? ஈழம் மலர்ந்திருக்குமா?
ஈழம் மயிரில் கூட மலர்ந்திருக்காது, யாரும் அமைத்து பிரபாகரன் கையில் கொடுத்திருக்கமாட்டார்கள். துப்பாக்கி தூக்கியவுடன் நாடு அமைந்துவிடாது
சாத்தியமே இல்லா விஷயம் அது, அமிர்தலிங்கத்தையும் புலிகள் கொன்று நாங்களே எல்லாம் என்றபின்பு அந்த கட்டபஞ்சாயத்து ரவுடிகளுக்கு யாரும் முடிசூட்ட மாட்டார்கள்

மக்களை திரட்டா ஈழபோராட்டத்தை நான் போராட்டமாகவே கருதவில்லை என்றார் காஸ்ட்ரோ
இலங்கையில் மொத்த மக்களையும் திரட்டாமல் சிறிய குழு துப்பாக்கி தூக்கி ஒன்றும் ஆகபோவதில்லை என்றார் அராபத்
இந்தியா அமைதிபடை அனுப்பியிராவிட்டால் பன்னாட்டு அமைதிபடை அல்லது அமெரிக்க படைகள் வந்து அங்கு அமர்ந்திருக்கும், அன்றே பிரபாகரன் மண்டையில் போட்டுவிட்டு இன்றுவரை சம்மணமிட்டு அமர்ந்திருப்பார்கள்
அல்லது சிரியாவில் நடப்பது போல இலங்கையில் நடந்திருக்கும்
மற்றபடி அமைதிபடை சென்றுதான் ஈழத்தை கெடுத்தது என்பதெல்லாம் அறியாமை, இந்தியபடை செல்ல்லாவிட்டால் ஏதோ ஒருநாடு அல்லது பலநாட்டு படை சென்றிருக்கும், அழித்திருக்கும்
ஆம் ஜெயவர்த்தனே அழைத்துத்தான் இந்திய படை சென்றது, அவர் இன்னொரு நாட்டை அழைத்தால் இன்னொரு நாட்டுபடைதான் சென்றிருக்கும்.
அந்த வாய்ப்பினை இந்தியா கொடுக்கவில்லை
இன்னொரு நாடு சென்று அன்றே சாக வேண்டிய சண்டாளனை உண்மையில் அமைதிபடை காப்பாற்றியது
அதோடு மோதி விரட்டினான் அந்த சண்டாளன்
அதன் பின்பு அவனுக்கு 20 வருடம் வாழும் வரத்தை அதுவும் ராஜிவ் கொலைக்கு பின்னும் அவன் திருந்த அவகாசம் வழங்கியது இந்தியா
திருந்தா சண்டாளன் 60 ஆயிரம் மக்களோடு செத்தான், இவ்வளவுதான் அவனின் மாவீர மண்ணாங்கட்டி
1987ல் இந்தியபடையினை விரட்டிய புலி ஏன் 2009ல் மல்லாக்க கிடந்தது?
இந்திய அமைதிபடை காட்டிய பொறுமையினை நிதானத்தை சிங்கள படை 2009ல் காட்டவில்லை, இந்தியபடை அழிவுகளை குறித்து அஞ்சி நிதானமாக நடந்தது
ஆனால் 2009ல் உண்மையான யுத்தத்தை காட்டியது இலங்கை ராணுவம்
உண்மையான யுத்தத்தை சந்திக்கமுடியா கோஷ்டி மல்லாக்க விழுந்தது