துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை

துருக்கி வடசிரியாவில் சில நகரங்களை ஆக்கிரமித்துகொண்டது, துருக்கி மேல் அமெரிக்கா சில தடைகளை வீசினாலும் துருக்கியின் எர்டோகன் அசைவதாக தெரியவில்லை

துருக்கியின் குறி குர்து தீவிரவாதிகள், குர்துகள் சிரிய அரசை எதிர்ப்பவர்கள் என்பதால் துருக்கி அவர்களை குறிவைக்கின்றது

குர்துகளோ சட்டென சிரிய அதிபரோடு சேர்ந்து கொண்டார்கள், இது ஒருவகையான தந்திரம். அதாவது குர்துகளை அடித்தால் சிக்கல் இல்லை, சிரியா அரசை துருக்கிஅடிக்குமானால் ஈரானும் ரஷ்யாவும் சும்மா இராது

இந்த கோபத்தில் ஏண்டா சிரியா அரசுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிவிட்டு அவர்களோடே கூட்டணி வைக்க உங்களுக்கு வெட்கம் இல்லை மானம் இல்லை என சகட்டுமேனிக்கு காரி உமிழ்கின்றது துருக்கி

குர்துவோ இதெல்லாம் அப்படித்தான் என அதன் போக்கில் சண்டையிடுகின்றது

நாம் துருக்கி அரசுக்கு ஒன்றை சொல்லலாம்

“முன்பு இலங்கையில் விடுதலைபுலிகள் இருந்தார்கள், சிங்களனோடு சண்டையிட்டார்கள் ஆனால் இந்திய தலையீடு வந்தபின் எந்த சிங்களனை எதிர்த்தார்களோ அவனஓடு சேர்ந்து இந்திய படைகளுடன் மோதினார்கள்

அவர்களுக்கு மானமும் வெட்கமும் கொஞ்சமும் இல்லை இந்த குர்துகளை போல..”