ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது
ராஜிவினை நாங்கள் கொல்லவில்லை என புலிகள் சொல்லிவிட்டதாக ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது
எவ்வளவு வருடம் கழித்து அதுவும் யார் மறுத்திருக்கின்றார்கள் என்றால் 30 வருடம் கழித்து சம்பந்தமே இல்லா யாரோ சிலர்
புலிகள் இயக்கம் இப்பொழுது இல்லை மாறாக புலிகளின் பில்லியன் டாலர் சொத்துக்கு காவல் இருக்கும் சிலர், அதாவது போர் என்றால் என்னவென்றே அறியாத ஒரு சிலர் புலி என சொல்லிகொண்டு அதற்கு காவல் இருக்கின்றனர்
ராஜிவ் கொலையில் குற்றம்ச்சாட்டபட்டது பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் பெண்புலி அகிலா. இவர்கள்தான் மூல குற்றவாளிகள்
இந்த 3 பேரும் ராஜிவ் கொலைக்கு பின் பல்லாண்டுகள் இருந்தார்கள் , அகிலா முதலில் இறந்தார் இந்த பொட்டு அம்மானும் பிரபாகரனும் 2009 வரை இருந்தார்கள்
ஒரு இடத்திலும் அவர்கள் ராஜிவ் கொலையினை நாங்கள் செய்யவில்லை என மறுக்கவில்லை, கொலை நடந்ததும் முதலில் மறுத்தார்கள் ஆனால் சிவராசனின் வயர்லெஸ் தொடர்பு ஆதாரம் இன்னும் பலதரபட்ட ஆதாரங்களை துல்லியமாக இந்தியா கண்டெடுத்தபின் பிரபாகரன் 18 வருடம் வாயே திறக்கவில்லை
வருடாவருடம் மாவீரன் உரை வாசிப்பார் அதில் இந்தியா தடை நீக்கவேண்டும் என்பார் ஆனால் எதற்கு தடை என சொல்லவே மாட்டார், அவரின் திமிர் அல்லது தமிழக ஈழ அல்ட்ராசிட்டிமேலான நம்பிக்கை அப்படி இருந்தது
உலக பத்திரிகையாளர் சந்திப்பு கிளிநொச்சியில் நடந்த பொழுது ராஜிவ் கொலைபற்றி பத்திரிகையாளர் கேட்டதற்கு “ஆஆஆஆ ஈஈஈஈ அது ஒரு துன்பியல் சம்பவம்” என புறந்தள்ளிய பிரபாகரன் அதை கொஞ்சமும் குற்றமாகவே கருதவில்லை அதை தாண்ட முயற்சிக்கவில்லை
ஆக ராஜிவினை கொல்லவில்லை என சொல்ல காலமிருந்தும் சொல்லாத பிரபாகரன் அதை தாங்கள் செய்ததாக மவுனமாக ஒப்புகொண்டார், பிரேமதாசா கொலைக்கும் இப்படி மவுன ஒப்புதலே
அவனே மவுனமாக இருக்க , சம்பந்தமே இல்லா ஒரு கோஷ்டி ராஜிவ் கொலையினை நாங்கள் செய்யவில்லை என சொல்லியிருப்பது ஏன்?
அதுவும் சைமன் நானே கொன்றேன் என சொல்லும்பொழுது சொல்லியிருப்பது ஏன்? முழு பழியினையும் சீமான் மேல் திருப்ப போகின்றார்களோ?