நேரம் சுத்தமாக சரியில்லாத அரசியல்வாதிகள்

உலக அளவில் நேரம் சுத்தமாக சரியில்லாத அரசியல்வாதிகள் 3 பேர். இம்ரான்கான் , ராகுல்காந்தி மற்றும் முக ஸ்டாலின் என்பவர்கள் அவர்கள்

இதில் முக ஸ்டாலின் அடிக்கடி எங்காவது சிக்கி பல்ப் வாங்குவது நடந்துகொண்டிருகின்றது, கோவில் கோவிலாக துர்கா அம்மையார் அலைந்து திருந்து பரிகாரம் செய்தாலும் பலனில்லை. இந்து தெய்வங்கள் அவருக்கு அருள் வழங்கமாட்டேன் என

பழிவாங்குகின்றது போல‌

எல்லாம் மறந்துபோக அது என்ன தமிழனா? தெய்வம் அல்லவா அதனால் எல்லாம் நினைவிலே இருக்கும் கலைஞர் எழுதிய, பேசிய பேச்சு உட்பட.

அந்த முக ஸ்டாலின் அசுரன் படம் பார்க்க தன் பரிவாரங்களோடு சென்றிருக்கின்றார், படத்தையும் பார்த்திருகின்றார், வலுகவனமாக அழகன் என எழுதாமல் அசுரன் படம் பற்றி கருத்தும் சொல்லிவிட்டார்

அந்த கருத்துத்தான் சிக்கல்

படம் நிலமீட்பை பற்றியது அப்படி இப்படி என சொல்லபோக , இவரை கண் கொத்தி பாம்பாக கண்காணித்த ராமதாஸ் வாய்ப்பை விட கூடாது என வந்துவிட்டார்

ஆம் அறிவாலயம் உட்பட்ட பகுதி பஞ்சமி நிலத்தில் ஆக்கிரமித்துகட்டபட்டதாக முன்பே சர்ச்சை உண்டு, நீங்கள் எப்ப்பொழுது நிலத்தை திருப்பி கொடுப்பீர்கள் என கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் ராமதாஸ்

ஏற்கனவே “ஏம்பா சலூன்ல மீசை கட்பண்ணத்தானே போனீராம், அதைய மிசா என சொல்லிகொண்டிருதீர்” என பலர் கலாய்க்கும் நிலையில் ஸ்டாலின் அப்செட்

திமுக சமூக நீதி முதல் தா.கிருட்டினன் கொலை நீதிவரை காத்தது என்பவர்களும் திமுக நிலமீட்புக்கு என்ன செய்ததுஎன கேட்டால் சொல்லதெரியாது

நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டுவந்தவர் இந்திரா, மன்னர்கள் மற்றும் ஜமீந்தார்களை குறிவைத்து அவர் அதை நகர்த்தினார், திமுக அதன் சாயலில் சில அறிவிப்புகளை செய்தது

மற்றபடி எல்லாம் கூவத்தை சுத்தபடுத்திய கணக்குத்தான்

இதுபற்றி முக ஸ்டாலினிடம் கலைஞர் எவ்வளவு நிலங்களை மீட்டார் என கேட்டால் “கலைஞர் அவர்கள் சென்னைக்கு வரும்பொழுது அவருக்கு நிலம் கிடையாது, கோபாலபுரம் வீட்டு நிலத்தை மீட்டார், அறிவாலய நிலத்ததை மீட்டார், கடைசியிலும் மெரினாவில் 6 அடி நிலத்தை பழனிச்சாமியிடம் இருந்து மீட்டார்

அவர் வழியில் நாங்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நிலம் மீட்டோம், கல்யாண மண்டபத்துக்கு மீட்டோம், தமிழமெங்கும் திமுக அன்பர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக மீட்டார்கள்” என சீரியசாக சொல்லிகொண்டிருப்பார்