வாழ்வில் நாம் கண்ட அதிர்ச்சியான சம்பவம் அது
வாழ்வில் நாம் கண்ட அதிர்ச்சியான சம்பவம் அது , அந்ந நாள் நன்றாக நினைவிருக்கின்றது. 1991 மே இரவு 21 மணியளவில் ராஜிவ் கொலை செய்தி பரவியது , இந்திய ஊடகம் சொல்லவில்லை முந்தி சொன்னது பிபிசி
மெல்ல தொடங்கிய பதற்றம் அதன் பின் உச்சத்திற்கு சென்றது. அந்த காட்சிகள் இன்றும் கை நடுங்க வைக்கும் ரகம்
வள்ளியூரில் கலைஞர் கருணாநிதியின் கட் அவுட்டில் தலையினை வெட்டி இருந்தார்கள், அந்த மிக சிறிய டவுணுக்கே அந்த ஆத்திரம் என்றால் தமிழகம் எப்படி இருந்திருக்கும்?
திமுகவினரின் சொத்துகள் குறிவைத்து எரிக்கபட்டன, நொறுக்கபட்டன, வைரமுத்துவின் காரும் எரிக்கபட்டது
திமுக கொடுத்த ஆதரவே இந்த படுகொலைக்கு காரணம் என தமிழகம் தானாக நம்பியது, ஆம் அப்பொழுது கொலை செய்தது புலிகள் என்று கூட தெரியாது, ஆனால் திமுக கூட்டணிக்கும் ராஜிவ் ஜெயலலிதா இருந்த கூட்டணிக்கும் ஆகாது என்பது அரசியல்
ஆனால் ஆண்டன் பாலசிங்கம் அமைதிபடை வெளியேறியதும் சொன்ன “இனி புலிகளின் மோதல் இந்திய தலமையுடன் இருக்கும், எங்களின் இலக்கு அவர்களே” என சொன்னதை மிக சரியாக நினைவில் கொண்டது தமிழகம்.
சுப்பிரமணியன் சாமி கூட ராஜிவினை கொன்றது புலிகள் என தாமதமாகத்தான் சொன்னார், ஆனால் அதற்குள் தமிழகத்தில் ஆத்திரம் பொங்கியது
அந்த நேரம் பத்மநாபா படுகொலை நடந்து 6 மாதமே ஆகியிருந்தது என்பதும் குறிப்பிடதக்கது
லண்டனில் இருந்து கிட்டு எனும் புலி புலி தொடர்பை முதலில் மறுத்தது மறுத்தாலும் பரவாயில்லை “முடிந்தால் எவன் செய்தான் என கண்டுபிடியுங்கள்” என எகத்தாளம் பேசியது
அந்த வழக்கு அமெரிக்க கென்னடி கொலை போல முடியவேண்டியது, ஆனால் ஹரிபாபுவின் படங்களும் நளினியின் ஒத்துழைப்புமே வழக்கை மாற்றின
நளினி என்பவர்தான் இந்த வழக்கின் திறவுகோல், இதெல்லாம் வரலாறுகள்
ஆனால் அந்த ராஜிவ் கொலைக்கு பின் பாதிக்கபட்ட கட்சி திமுக, படுபாவி புலிகளை நம்பி கையினை சுட்டுகொண்டதை உணர்ந்தார் கருணாநிதி
தன் கட்சிக்காரன் சொத்து எரிக்கபடுவதையும், திமுக கொடிகம்பம் சரிக்கபடுவதையும் கண்ணால் காணும் பொழுதே அவருக்கு முடிவு தெரிந்தது ஆம் அவர் மட்டும் ஒரே ஒரு இடத்தில் வென்றிருந்தார்
ராஜிவ் கொல்லபட்ட காட்சி ஒவ்வொரு தமிழனின் ரத்ததிலும் ஆள பதிந்தது, அதை சொந்த வீட்டு மரணமாகவே தமிழன் கருதினான்
அந்த சிங்களன் கொழும்பு அணிவகுப்பில் ராஜிவினை கொல்லமுயன்றபொழுதே இலங்கை மேல் போர்தொடுக்க வேண்டும் என பொங்கிய தமிழகம் இது
“சிங்களனுக்கும் தமிழனுக்கும் சண்டை தமிழன் அகதியாய் வருகின்றான் பாவம், அவனுக்கு உதவி செய்வோம்,
அட இதென்ன வடமாரட்சியிலும் புலிகளை மொத்தமாய் சுருட்டிவிட்டானா சிங்களன், சரி இனி புலிகளால் ஒரு புல்லையும் புடுங்கமுடியாது ம்ம் இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள்” என்பதுதான் தமிழக நிலைப்படாய் இருந்தது
அதில்தான் தமிழகம் நின்றது
முதலில் ஈழமக்கள் அமைதிபடையினை வரவேற்றனர், அமைதிபடை இருக்கும் பொழுது அப்பக்கமே இலங்கை ராணுவம் வரவில்லை
பூரண அமைதி திரும்பியிருந்தது, அந்த அமைதியினை வலிய இந்திய ராணுவத்தோடு மோதி கெடுத்தனர் புலிகள்
இந்திய ராணுவத்திடம் முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த புலிகளுக்கு மறுபடி நவீன ஆயுதம் எங்கிருந்து வந்தது? புலிகள் நடத்தியது பூராவும் நாடகம்
, அமைதிபடை மோதலில் அதாவது இந்திய ராணுவத்தை கொன்றுவிட்டு இந்தியாவின் தமிழகத்தில் புலிகள் சிகிச்சைக்கு வரும்பொழுதும் தமிழ்நாட்டு தமிழனுக்கு மனிதாபமே தெரிந்தது
ஆனால் அதை எல்லாம் கொஞ்சமும் மதிக்காமல் தமிழ் மண்ணிலே ராஜிவினை கொன்றதை இங்குள்ள தமிழன் மகா வெறுப்பாகவும் அவமானமாகவும் உணர்ந்தான்
அதன் பின் புலிபக்கம் தமிழன் திரும்பி கூட பார்க்கவில்லை
புலி ஆதரவு வைகோ, புலிகளால் கோடிகணக்கில் கொட்டி கட்சி தொடங்கபட்ட வைகோ செல்லாகாசாகினார், இன்னும் புலிஎன ஒருவன் பேசினாலே ஒதுக்கி வைத்தது தமிழகம்
அதை மனதார உணர்ந்ததால்தான் 2009ல் அமைதியாய் இருந்தார் கருணாநிதி, ஆம் புலியினை தமிழகம் மயிறுக்கு கூட மதிக்கவில்லை என்பது அவருக்கு அன்றே புரிந்தது
பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவே வெல்லும் பொழுது அவருக்கு உண்மை புரிந்தது
தொட கூடாதவனை தொட்டு கையினை சுட்டுகொண்ட கருணாநிதி மிக சரியாக 2009ல் அமைதிகாத்து பழிவாங்கினார்
அது 1991ல் சொத்தையும் இன்னும் பலவற்றையும் இழந்த ஒவ்வொரு திமுக தொண்டனின் காயத்துக்குமான மருந்து
வைகோ என்பவரை கொண்டு திமுக கட்சியினை புலிகள் பிளந்து திமுக பல பின்னடைவுகளை சந்திக்க செய்த காயத்துக்கான மருந்து
இன்றும் திமுக மகா பலமாக இருக்கின்றது, புலிகளை தொட்டிருந்தால் திமுக வைகோ போல ஆகியிருக்கும்
2009ல் ஈழமக்களை காக்க இந்தியாவுக்குத்தான் பொறுப்பு உண்டா?
பிரபாகரனுக்கு இல்லையா?
30 வருடமாக கிழிக்க முடியாத அவன் தோல்வியினை ஒப்புகொண்டு அம்மக்களை வெளியேவிட்டால் என்ன? நடந்த அழிவுக்கு அவனே காரணம்.
மலேசியா முதல் அமெரிக்காவரை தடை செய்யபட்ட ஒருவன் படத்தை பிடித்து கொண்டு இங்கு அரசியல் பவனி வரும் சைமனை பார்த்தால், அவன் மேடைகளில் பினாத்துவதை பார்த்தால் கஞ்சாவோ இல்லை அபினோ இழுத்துவிட்டுத்தான் அவன் மேடை ஏறுவான் என்பது போல தோன்றுகின்றது