அரசியலில் யாரையும் நம்பமுடியாது
பொன்முடி கலைஞரின் அந்திம காலங்களில் திமுகவோடு உரசலில் இருந்தார், கலைஞர் காலமான பின் சில முக்கிய கூட்டங்களில் அவரை காணமுடியவில்லை
பாடகர் எ.வ வேலுவோடு உரசல் என்றார்கள் , பொன்முடி வேறுகட்சிக்கு தாவ போகின்றார் என்றார்கள் ஏக ஆருடங்கள் வந்தன, அப்பொழுதெல்லாம் பொன்முடி மவுனமாக இருந்தார்
திமுக பாராளுமன்ற தேர்தலில் பலம்பெற்ற பின்பே மறுபடி களத்துக்கு வந்தார், அவரின் இந்த மிசா பேட்டிகளில் ஏதும் உள்நோக்கம் இருக்கலாமோ என்னமோ?
அரசியலில் யாரையும் நம்பமுடியாது, நம்பவும் கூடாது எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார் என்பது சாணக்கிய தத்துவம்
மன்னராட்சி ,மக்களாட்சி, கட்சி என எதுவாயினும் அந்த ஞானியின் வாக்கு மிக சரியாக பொருந்தும்…
காரணம் அவனின் ஞானமான நீதி மானிட குணத்தின் அடிப்படையில் எழுதபட்டது