ஓரளவு உண்மையும் இருக்கலாம்

நிர்மலா சீத்தாராமன் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பாக வங்கிகளின் நிலைதன்மையினை ஆட்டம் காண வைத்தவரென மன்மோகன்சிங்கையும் ரகுராம் ராஜனையும் கைகாட்டுகின்றார்

அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்

1990க்கு முன்பு வரை வங்கி மோசடிகள் இன்னும் பல வகையான பண மோசடிகள் எல்லாம் இல்லை, பொருளாதார குற்றங்கள் இன்று உள்ள அளவு அன்று இல்லை

பணவீக்க விகிதமும் விலைவாசியும் கட்டுக்குள் இருந்தன‌

மன்மோகன் சிங் நிதி அமைச்சரான பின் தாராளமய கொள்கைக்கு மாறினார், இன்னும் காட் ஒப்பந்தம் முதல் பல ஒப்பந்தங்களுக்குள் இந்தியாவினை இழுத்து சென்றார்

அன்று வலுவாக இருந்த கம்யூனிஸ்டுகள் தலையில் அடித்து இதை எதிர்த்தனர், இது நாட்டை நாசமாக்கும் விவகாரம் , விலைவாசி உயரும் என்றெல்லாம் எச்சரித்தார்கள், போராடினார்கள்

ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி மன்மோகன் சிங் அதை நிறைவேற்றினார்

அவர் காலமே இந்தியர் இரட்டை குடியுரிமை வைக்க வழிகோலிற்று இன்று மொரிஷீயஸ், பனாமா, பிரிட்டன் என பல நாடுகளில் இந்தியர் புகுந்து மோசடி செய்ய இதுதான் காரணம்

தங்க கட்டுபாட்டை அவர் நீக்கியதுதான் இங்கு நடக்கும் முறையற்ற ஏகபட்ட வரவுகளுக்கும் இன்னும் பல்வகை விஷயங்களும் காரணம்

நிர்மலா சொல்வதில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கின்றது, பன்னாட்டு பணங்கள் இங்கு குவிய வங்களிகளுக்கு பல கதவுகளை திறந்துவிட்டவர் மன்மோகன் சிங் , சீர்திருத்தம் எனும் பெயரில் இங்கு சில சீர்கேடுகளை அவர் தொடங்கினார்

இந்தியா இனி தங்களின் வேட்டைகாடாக மாறும் என மகிழ்ந்த மேற்குலகம், அதாவது இந்திய சந்தையினை வங்கியினை தனக்கு சாதகமாக திறந்த மன்மோகனை மேற்குலகம் கொண்டாடியது

ஆனால் அதன் விளைவுகள் இன்று தெரிகின்றன நிர்மலா அதைத்தான் சொன்னார்

காட் ஒப்பந்தம் இன்னும் பல ஒப்பந்தம் மன்மோகனால் நிறைவேற்றபடும் பொழுது கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லி எதிர்த்தார்களோ , எதற்கு அஞ்சினார்களோ அதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கின்றது