அவர்களின் கேடுகெட்ட ஆசை இதுதான்
‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய க்ருத,, ஊரு ததஸ்ய யத்வைஸ்ய, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” – (ரிக் வேதம் 10-90-12)
வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் , அது சொல்லும் ஸ்லோகம் இது
இதன் பொருள் என்னவென சமஸ்கிருத விற்பனர்கள், வேத பண்டிதர்களிடம் கேட்டால் இப்படித்தான் சொல்கின்றார்கள்
பிராமணன் எனும் அந்தணின் முகம் பிரகாசமாயிருத்தல் வேண்டும் அதாவது தெளிந்த அறிவிலும் ஆழ்ந்த ஞானத்திலுமே பிரகாசம் வரும்
சத்திரியனின் தோள்கள் வலுவானதாக இருக்கவேண்டும் அவன் அப்பொழுதுதான் புஜபலத்தில் நாட்டை காக்க முடியும்
வைசியர் எனப்படு வியாபார பிரிவினர் அடுத்தவன் வயிற்றில் அடிக்காத அளவு நியாயாமாய் வியாபாரம் செய்தல் வேண்டும், அவன் தன் பேராசை அல்லது பெருந்தீனி தின்னாமல் நியாயமான அளவு உண்ண வேண்டும், தீர்க்கமான தொடைகள் மேல் அதாவது உறுதியாக நிலைப்பாட்டில் அமர்ந்திருத்தல் வேண்டும்
சூத்திரன் என்பவன் ஓடியாடி உழைப்பவன் என்பதால் அவன் பாதங்கள் வலுவாக இருத்தல் வேண்டும், சேற்றில் இருந்து அரிசி கொடுப்பது முதல் மாடுகளை பராமரித்து உணவு ஊட்டுதல் அவனே
ஆக பிராமணனுக்கு முக அமைதியும் ஞானமும், சத்திரியனுக்கு தோள்வலிமையும், வியாபாரிக்கு அடுத்தவன் வயிறு எரியாத அளவு (தன் நியாயமான உணவு அதாவது நியாயமான லாபம்) நியாயமான தர்மமும் , சூத்திரனுக்கு வலுவான கால்களும் வேண்டும் இதுவே நல்ல சமூக இயக்கத்துக்கு அடிப்படை என்கின்றது வேதம்
இதை நம் கருப்பு சட்டைகள், திராவிட அழிச்சாட்டிய கும்பல் , சமூக நீதி காக்க வந்த சிங்கங்கள் எப்படி மாற்றின தெரியுமா?
பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவன் பிராமணம், நெஞ்சில் இருந்து வந்தவன் சூத்திரன், வயிற்றில் இருந்து வந்தவன் வைசியன், கால் தூசியில் இருந்து வந்தவன் சூத்திரன்
“ஏ பார்ப்பானியமே, ஏ மனுதர்மமே இதுதான் நீதியா? 4 வகை வர்னாசிரமம் என்பது மானிட அநீதி, எமக்கு வேண்டும் சமூக நீதி
அய்யய்யோ பிறப்பிலே ஏற்றதாழ்வு சொல்லும் வேதம் இது, இதை கொளுத்துங்கள்” என கிளம்பி ஒரே அழிச்சாட்டியம்
ஏன் சமஸ்கிருதம் வேண்டாம் என அக்கும்பல் கொடிபிடிக்கின்றது என இப்பொழுது புரிகின்றதா?
ஆம் சமஸ்கிருதம் படித்தால் எல்லோருக்கும் உண்மை அர்த்தம் புரிந்துவிடும் அதன் பின் இவர்களை கருப்பு துணியில் கண்களை கட்டி கை காலை கட்டி கடலில் எறிந்துவிடுவார்கள்
அதனால் தமிழர்கள் சமஸ்கிருதம் படிக்கா முட்டாளாக இருந்து இவர்கள் சொல்லும் படு பயங்கர மொழிபெயர்பினை எல்லாம் கேட்டுகொண்டே இருக்க வேண்டும்
அப்படி கேட்டு கொண்டே இந்துமதத்தை பிராமணனை திட்டிகொண்டே இருக்க வேண்டும், அதை வைத்து இவர்கள் அரசியல் இன்னும் பல காரியங்களை ரசித்தபடி செய்துகொண்டே இருக்க வேண்டும்
அவர்களின் கேடுகெட்ட ஆசை இதுதான்
