மிசா பற்றி தெரியாத கோஷ்டி ஒன்று கிளம்பியிருக்கின்றது
மிசா பற்றி தெரியாத கோஷ்டி ஒன்று கிளம்பியிருக்கின்றது, அவரச கால நிலைக்கு உத்தரவிட்ட நீதிபதி பெயர் மிசா அவர் மனைவி பெயர் உஷா எனும் அளவில்தான் அவைகளுக்கு அறிவு இருக்கின்றன


அந்த கோஷ்டி மிசாவில் கைதானவர் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இல்லை என சொல்லிகொண்டிருக்கின்றது
உண்மையில் அன்று மிசா சட்டத்தில் கைதானவர் பற்றி தகவலே கிடையாது, யாரெல்லாம் காணாமல் போனார்களோ அவர்கள் பெயரை குடும்பத்தாரும் கட்சிக்காரரும் மிசாவில் கைதானவர்கள் என சேர்த்துகொள்ளும்
நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருந்தன, இன்னார் கைது என்றோ கைதுபட்டியலை பத்திரிகையிலோ எழுதமுடியாது
சிலமுறை எழுதி அது தணிக்கை செய்யபட்டு அதாவது காவல்துறை ஒப்புதல் பெற்றபின்பே செய்தி வெளியிடபட்ட நிலையில் கருணாநிதி எழுதியது எல்லாம் தணிக்கை செய்யபட வெறுப்பில் முரசொலியில் “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது என்கின்றார் ஆதிலட்சுமி” என எழுதி வைத்தார் கருணாநிதி
ஆனால் அவர் பத்திரிகையில் எழுதவில்லையே தவிர தந்திர காரியம் செய்தார், கைது செய்யபட்டோர் பட்டியலை அண்ணா சமாதிக்கு சென்று இங்கு வரமுடியாதோர் பட்டியல் என வாசித்துவிட்டு வந்துவிட்டார்
இந்திரா காந்தி மனதுக்குள் சிரித்த காலம் அவை
அந்த கால நிலை அப்படித்தான் இருந்தது, இந்த நீதிபதி ஷா அறிக்கை கூட முழுவிவரமும் சொல்லவில்லை
யார் எங்கே இருந்தார்கள் எந்த சிறையில் இருந்தார்கள் என்பதெல்லாம் ரகசியம், அரசு அப்படித்தான் வைத்திருந்தது
பல அறிக்கைகள் வந்தன, ஷா அறிக்கை இஸ்மாயில் அறிக்கை என ஏகபட்டவை உண்டு. அதில் நீதிபதி இஸ்மாயில் அறிக்கை முக ஸ்டாலின் மிசாவில் கைது என்பதை தெளிவாக சொல்கின்றது
அந்த கால கைதுகள் ஓரளவுதான் பட்டியலிடபட்டன வெளிவரா கருப்பு பட்டியல் என்றொரு தனிபக்கமே உண்டு
இன்று வெளிவரும் தகவல் கூட பாதிதான், பல மறைக்கபட்டன. சிலர் தான் சிறையில் இருந்ததை சொல்லாமல் மறைத்த காலமும் உண்டு
ஸ்டாலின் மேடைகளில் உளறலாம், பழனிச்சாமியிடம் பின்வாங்கலாம் அதுபோக ஏக அழிச்சாட்டியம் செய்யலாம்
ஆனால் அவர் மிசாவில் கைது செய்யபட்டார் என்பதும் , தாக்குதலுக்கு உள்ளானார் என்பதும் வரலாற்று உண்மை
ஒருவகையில் அவர் கட்சிக்காக அன்றிலிருந்தே உழைத்திருக்கின்றார், மிக சிறிய வயதில் இருந்தே ஏதோ ஒரு அணியில் இருந்து ஏதோ செய்துகொண்டுதான் இருந்தார்
நாம் முன்பே சொன்னபடி இந்திராவினை தாக்கி பேசியதுதான் அவர் கைதுக்கும் தாக்குதலுக்கும் காரணம்
இன்னொரு காரணம் உண்டு, சொன்னால் சர்ச்சைதான் ஆனால் அதுதான் உண்மை
கருணாநிதிக்கு குடும்ப பாசம் அதிகம் , கட்சிகாரர்கள் என்றால் கல்லாய் இருக்கும் மனிதர் குடும்பத்தார் என்றால் உடைந்தே விடுவார்
அவரை மனதால் நொறுக்கத்தான் ஸ்டாலினை நொறுக்கினார்கள்
இந்த காட்சி பின்னாளில் முரசொலிமாறன் மேல் தாக்குதல் , கனிமொழி சிறைவாசம் , அழகிரி சர்ச்சைஎன பல இடங்களில் தெரிந்தது. எதில் மனிதர் பலஹீனமோ அதில் ஓங்கி அடிப்பதில் அவரின் எதிரிகளுக்கு சந்தோஷம்
ஸ்டாலின் கைது இந்த கோணத்திலும் உண்டு
நாம் உள்ளதை உள்ளபடி சொல்வோம், நம் சுதர்மம் அதுவே. அதனால் உறுதியாக சொல்கின்றோம் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யபட்டதும் சில சித்ரவதைகளை சந்தித்ததும் அவருக்காக சிட்டிபாபு சிறையில் செத்ததும் கருப்பு பக்கங்கள்..
கலைஞரின் பிள்ளைகளில் மிசா கைதியாகி சிறைவாசம் சந்தித்த ஒரே நபர் அவர்தான், அதுதான் அவரை அரசியலுக்கும் இன்றைய உச்ச நிலைக்கும் அழைத்தும் வந்தது
மற்றபடி முக ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்பவனிடம் மிசா என்றால் என்னவென்று கேளுங்கள் நிசாவின் கள்ளபுருசன் என சொல்லிவிட்டு அவன் போக்கில் சென்றுவிடுவான்