அதிமுகவின் 48ம் ஆண்டுவிழா

அதிமுகவின் 48ம் ஆண்டுவிழா கொண்டாடபடுகின்றது

இந்த 48 ஆண்டுகளில் 30 வருடம் அக்கட்சிதான் ஆண்டிருக்கின்றது, 18 வருடம் மட்டும் திமுகவுக்கு வாய்ப்பு

அதுவும் கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியினை பிடித்த வகையில் வெறும் 13 வருடம் மட்டுமே திமுக ஆட்சி

இவ்வளவுக்கும் கொள்கையோ கோட்பாடோ இல்லா அதிமுக எப்படி இச்சாதனையினை செய்தது?

விஷயம் ஒன்றுமில்லை ஒருமாதிரியான பிரிவினைவாதம், ஆபாச அர்ச்சனை, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டோம் ஆனால் ரம்ஜானுக்கு எலும்பு கடிப்பபோம் எனும் மதவெறுப்பு இவை எல்லாம் சேர்ந்துதான் திமுகவின் இந்த தோல்விக்கு காரணம்

இன்றளவும் கூட்டணியின்றி திமுகவால் அதிமுகவினை நெருங்க முடியாது, பழம் பால் தோல் என ஏதாவது ஒரு பலம் வேண்டும்

இவ்வளவுக்கும் பகுத்தறிவு, திராவிடம், பெரியார் இன்னும் பல இம்சைகளை பேசாத கட்சி அதிமுக, அதன் தலைவர்களும் அமைச்சர்களும் கோவிலுக்கு சென்று வேத ஞானிகளுக்கே பாடம் எடுப்பார்கள்

அதுதான் அக்கட்சியின் வெற்றிக்கு காரணம், தமிழகம் பெரியார் மண் என்பதெல்லாம் சும்மா.

இன்னும் திமுக திருந்தியிருக்கின்றதா என்றால் இல்லை, அதனால் அது மறுபடியும் அப்படியே வாடகை கால் வாங்க அலையபோகின்றது, போகட்டும்

30 வருடம் கொள்கை என ஒன்றே இல்லாத கட்சியினை ஆட்சியில் வைத்திருப்பதுதான் திமுகவின் உச்சகட்ட சாதனை

மொத்தத்தில் தமிழ்நாட்டு அழிவுகாலம் தொடங்கி 52 வருடங்கள் ஆகின்றது , அதில் மகா குழப்பமான காலம் தொடங்கி 48 வருடம் ஆகின்றது

48 வருடமாக கொள்கையே இன்றி ஒரு கட்சி இயங்கி அது 30 வருடம் ஆண்டு இன்னும் ஆட்சியில் இருப்பதெல்லாம் பெர்முடா முக்கோணத்தை விட மர்மமான விஷயம், மபெரும் உலக அதிசயமும் ஆச்சரியமும் அதுதான்

50ம் ஆண்டு எட்டுவதற்குள் அக்கட்சி கலைந்துவிட்டால் மிக்க நல்லது, அதையே எதிர்பார்ப்போம்