அமெரிக்க ராஜதந்திரிகள் தலையில் அடித்து கொண்டிருக்கின்றார்கள்..

நம்ம ஊர் முக ஸ்டாலின் ராகுல் காந்தி போலவே நாக்கில் சனி கொண்டவர் டிரம்ப்

அன்னார் மறுபடியும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார்

நேட்டோ நாடு எனும் வகையிலும், ரஷ்ய கருங்கடலுக்கு அருகாமை நாடுஎனும் வகையிலும் துருக்கியில் அமெரிக்க ராணுவ முகாம் உண்டு, இன்றும் உண்டு

சிரியாவில் அமெரிக்க மூக்கு உடைந்திருக்கும் நிலையில் துருக்கி மேல் பொருளாதார தடை விதித்திருகின்றது அமெரிக்கா, இதனால் துருக்கியில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது டிரம்பிடம் கேட்டுவிட்டார்கள்

நேட்டோ உறுப்பினர் எனும் வகையில் துருக்கியில் அமெரிக்க முகாம் இருந்தேதீரும், ஆனால் டிரம்ப் ஒருபடி மேலே சென்றுவிட்டார்

துருக்கியில் நம் வீரர்களும் ஏவுகனைகளும் மட்டுமல்ல, அணுஆயுதங்களும் உள்ளனனவாக சொல்லபடுமே அவை பாதுகாப்பாக இருக்குமா என யாரோ ஒரு நிருபர் கொளுத்தி போட “ஆம் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும், அங்கு நம் விமானபடை தயாராக உள்ளது” என சொல்லிவிட்டார் டிரம்ப்

நிச்சயம் டிரம்ப் அதை சொல்லியிருக்க கூடாது

என்னது? துருக்கியில் அமெரிக்கா அணுகுண்டுகளை பதுக்கியிருப்பதை டிரம்ப் ஒப்புகொள்கின்றாரா? என உலகம் கேட்க தொடங்கிவிட்டது

துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதம் உண்டு என்பது ரகசியமல்ல, ராணுவ உலகில் தெரிந்ததே ஆனால் அதை வெளியில் சொல்லி வாங்கிகட்டிகொண்டிருக்கின்றார் டிரம்ப்

இனி அய்யய்யோ எங்கள் நாட்டில் அணுஆயுதம் வைத்து எங்களை கொல்லபார்க்கின்றது அமெரிக்கா, ஏ நியாயஸ்தர்களே இந்த அபாய நாட்டையும் அவன் அணுகுண்டையும் இங்கிருந்து விரட்டி அடிக்க உதவுங்கள் என துருக்கி ஒப்பாரி வைக்க தொடங்கலாம்

அமெரிக்க ராஜதந்திரிகள் தலையில் அடித்து கொண்டிருக்கின்றார்கள்..