ஒரு குரல் உரக்க சொன்னது

2011ம் ஆண்டு புலிகளை பற்றி பேச எல்லோரும் அஞ்சிய தருணம், கலைஞர் கருணாநிதியே ஒருமாதிரி புலம்பிகொண்டுதான் இருந்தார்

புலிகளின் பிம்பம் அப்படி இருந்தது, யாரும் புலிகளை பற்றி பேசமுடியா நிலை

ஒரு குரல் உரக்க சொன்னது, அது அஞ்சவில்லை, தயங்கவில்லை. தன் கட்சி நிலைப்பாடு இந்திய நிலைப்பாட்டில் உறுதியாய் சொன்னது

“ஆம் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம், ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு என்ன முடிவு கட்டபட வேண்டுமோ அது கட்டபட்டது” என உரக்க சொன்னது

அது தலைவி குஷ்புவின் குரல். ஆம் அவர் மகா உறுதியாய் சொன்னார். ஜெயலலிதாவுக்கு பின் அதை சொன்ன ஒரே தலைவர் இன்றுவரை அவர்தான்

அப்பொழுது ஆளாளுக்கு குதித்தார்கள், அவர் வீட்டுமேல் கல் எறிந்தார்கள், மிரட்டினார்கள், காரை உடைத்தார்கள் ஆனால் தலைவி அஞ்சவில்லை

குதித்தோர் யாரென்றால் இதே சீமாண்டி மற்றும் திருமா கோஷ்டி

தலைவியின் அந்த வீரமுழக்கத்துக்கு பின்பே பலர் புலிகளை விமர்சிக்க தொடங்கினார்கள், நாமெல்லாம் அவருக்கு வலுசேர்க்கும் கருத்துக்களை சொன்னோம், ஆளாளுக்கு இறங்கி அடிக்க பிரபாரகனின் புனித பிம்பம் நொறுங்கி சரிந்தது

தலைவி சொன்னபடி 2011லே மகா உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த சீமாண்டி இந்த அளவுக்கு பேசியிருக்கமாட்டான்

அன்று காங்கிரஸ் அரசுதான் டெல்லியில் இருந்தது, காங்கிரஸ்காரரான குஷ்புவுக்கு பாதுகாப்பு அளித்து அவர் குரலுக்கு செவிசாய்த்து அந்த அரசு களமிறங்கியிருக்க வேண்டும்

ஆனால் செய்யவில்லை

அந்த கூறுகெட்ட தலமையால் காங்கிரஸ் சரிந்து , கஞ்சா அடிமை எல்லாம் ராஜிவினை கொன்றது நான் என கூவிதிரியும் அவலநிலை வந்தாயிற்று

தலைவி அந்நாளும் இந்நாளும் எந்நாளும் நாட்டுபற்றும் தைரியமும் இந்நாட்டை பற்றிய தீர்க்க தரிசனமும்
கொண்டவர்,

அவருக்கு ஏன் சங்கம் வைத்து கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான்