பிஞ்சு குழந்தையினை அஜாக்கிரதையால் இழந்த அக்குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சம்பவம் நடந்து முதல் 10 மணிநேரத்துக்குள்ளேயே முடிவு எல்லோருக்கும் தெரிந்தது, அது பிஞ்சு கொஞ்ச நேரம் கூட தாங்கியிருக்க முடியாது

அரசும் மற்ற துறைகளும் முடிந்த எல்லா போராட்டத்தையும் நடத்தி முடித்தன அவர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை.

கொடும் வல்விதி ஒன்று காட்சிகளை நடத்தி முடித்துவிட்டது, அவனை விழ வைத்த விதி அப்படியே மீட்புபணிகளிலும் இடைஞ்சல் கொடுத்து முடித்துவிட்டது.

சனிகிழமையே முடிவு தெரிந்தாலும் தீபாவளி மற்றும் இன்னபிற நேரம் என்பதால் எதையோ செய்து திசை திருப்பி இனியும் முடியாது எனும் பொழுது அறிவித்துவிட்டார்கள்

எனினும் ஒரு விஷயம் சந்தேகத்தை எழுப்புகின்றது

2009ல் முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் சாகும் பொழுது அமைதி காத்த ஊடகங்கள், குறைந்தபட்சம் புலிகள் மக்களை விடுவிக்கவேண்டும் என கூட சொல்லா இந்த சிறுவனுக்கு இடைவிடாமல் பொங்கிய மர்மம் என்ன?

பல விஷயங்களை மறைத்ததில் பலருக்கு லாபம் இடைதேர்தல் தோல்வி உட்பட..

இங்கு எல்லாமே அரசியல், எல்லாம் நாடகம்

பிஞ்சு குழந்தையினை அஜாக்கிரதையால் இழந்த அக்குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள், அவன் அந்த தாயின் வயிற்றிலே மறுபடி பிறக்க இறைவன் மனமிறங்கட்டும்