மறைக்கபடும் இன்னொரு விஷயம் மருத்துவர்கள் போராட்டம்

அந்த சிறுவன் விவகாரத்தால் மறைக்கபடும் இன்னொரு விஷயம் மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்கள் நிலை கொஞ்சம் சிக்கல்தான், ஏகபட்ட நோயாளிகளை பார்க்க வேண்டும் சில இரவுகளில் தூக்கமின்றி திரியவேண்டும் என அவர்கள் சிக்கல் ஏராளம்

அதற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க சொல்லலாம்

மாறாக சம்பள உயர்வு மற்ற சலுகை இன்னபிற எல்லாம் ஏற்கமுடியாதவை

தமிழகத்தில் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் 5 ஆண்டு கட்டாயம் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவேண்டும் என ஒரு சட்டம் கொண்டுவருவதே அரசு மருத்துவர்கள் சிக்கல் தீர வழி

அரசு பணத்தில் படித்துவிட்டு பட்டம் பெற்றவுடன் தனியார் மருத்துமனைக்கோ இல்லை வெளிநாட்டுக்கோ செல்வது தேசவிரோதமாகும்

அதனால் இங்கு படிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டு இங்கு பணியாற்ற வேண்டும், அந்த திருத்தம் அவசியம் வேண்டும்

அவ்வளவுதான் அரசு செய்யமுடியும், அதற்கு மேலும் சலுகை வேண்டும் சம்பளம் வேண்டுமென்றால் அதாவது பணம் தான் முக்கியமென்றால் அரபு நாடுகளில் ஆபத்தான ரிக் எனப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு செல்லட்டும்

மருத்துவம் என்பது சேவை பணி , உயிரை காக்கும் அரும்பணிக்கு படித்துவிட்டு அதுவும் அரசு பணத்தில் படித்துவிட்டு இப்படி பொறுப்பின்றி போராடுவது நியாயமாகாது

இவ்விஷயத்தில் தமிழக காவலர்களை நாம் பாராட்டுகின்றோம் , எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அடிமட்ட சம்பளம் என்றாலும் அவர்கள் ஒருநாளும் வேலை நிறுத்தம் செய்ததில்லை

ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றதே அவர்களின் அர்பணிப்பான பணி, ஆனால் ஒருநாளும் அவர்கள் வேலை நிறுத்தம் செய்ததில்லை

காரணம் தங்களின் பொறுப்பு அவர்களுக்கு தெரிகின்றது, 10 நிமிடம் நாம் வேலை நிறுத்தம் செய்தாலும் சமூகம் வெட்டிகொண்டு செத்துவிடும் என்பது அவர்களுக்கு புரிகின்றது

அந்த பொறுப்புணர்ச்சி ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இல்லாமல் சுயநலம் ஓங்கிவிட்டது நிச்சயம் மகா சோகம்..