கெட்டதிலும் நல்லது என்பது இதுதான்

வள்ளியூர் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் திறந்திருப்பது அறியபட்டால் சொல்லுங்கள் அதை மூட போகின்றோம் என்றொரு சமூக சிந்தனை கோஷ்டி கிளம்பியிருக்கின்றது

நல்லது

அப்பகுதியில் பெரும்பாலும் ஒரு ஆழ்குழாய் கிணற்றில் நீர் இருப்பது தெரிந்தால் அவனவன் எதிரியே அதை மண்போட்டு மூடிவிடுவான்

ஆழ்துளை கிணற்றுகாரனுக்கு தான் எதிரி இல்லாவிட்டால் கூட மூடுவான், பலரின் குணாதிசயம் அது, ஒரு வகையான பொழுது போக்கு

இவனுக்கு ஏன் கிணறு எனும் நல்ல குணம் அன்றி வேறொன்றும் காரணமே அல்ல‌

இப்படி மூடபட்ட குழிகள் ஏராளம் உண்டு அது இன்னும் தொடரும் என்பதால் வள்ளியூர் பகுதிக்கு இந்த ஆபத்து அதிகம் இல்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும்.

கெட்டதிலும் நல்லது என்பது இதுதான்.