மயானம் சொல்லும் உண்மை இதுதான்
அந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்யபட்டாயிற்று, அந்த மயானம் சொல்லும் உண்மை இதுதான்
அந்த ஆழ்குழாய் கிணற்றை சரியாக மூடாமல் மண் அள்ளி போட்டு ஏதோ மூடியிருக்கின்றார்கள், 7 வருடமாக சிக்கல் இல்லை
ஆனால் உள்ளூடு வெற்றிடமான அந்த ஆழ்குழாய் மழை மற்றும் சில மாறுபாடுகளில் மறுபடி திறந்து பலிவாங்கிவிட்டது
இதனால் ஆழ்துளையினை மூடுபவர்கள் ஜல்லிகல் கலவை போட்டு மூடுவதுதான் சரியான தீர்வு, மேலோட்டமாக மூடிவைப்பது பின்னாளில் பலியெடுக்கலாம் ஜாக்கிரதை