மகா ஆபத்தான இயக்கம் அது

தமிழக கேரள வனபகுதியில் நக்சலைட்டுகள் 4 பேர் சுடபட்டுள்ளனர், கேரள‌ காவல்துறை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆக நக்சலைட் நடமாட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்பதும் அதை முளையிலே களைய அரசு முயற்சிக்கின்றது என்பதும் தெரிகின்றது

எங்கோ காட்டுக்குள் இருக்கும் நக்சலைட்டுகளால் தமிழ்நாட்டுக்கு என்ன ஆபத்து அவர்களை ஏன் சுடவேண்டும் என கேட்டால் உங்களை போல அப்பாவிகள் இல்லை

ஆம், அவர்களால் தமிழகத்தில் கலவரங்களை நிகழ்த்தமுடியும் ஆயுதம் முதல் பணம் வரை கொடுக்கமுடியும்

இங்கே தேசத்துக்கும் அரசுக்கும் எதிரான மனப்பான்மையினை விரக்தியில் இருக்கும் இளைஞர்களை எளிதில் மூளை சலவை செய்ய அவர்களால் முடியும்

பிரிவினைவாதிகள் இவர்களை தேவைகேற்ற பயன்படுத்துவார்கள், எல்லா ஆபத்தான தேசவிரோதிகளுடனும் இவர்களுக்கு தொடர்பு உண்டு

மகா ஆபத்தான இயக்கம் அது

கேரளாவில் பிணராயி விஜயன் எனும் கம்யூனிஸ்ட்டின் அரசு இருந்தாலும் இவர்கள் ஆபத்தானவர்கள் என சுட்டிருக்கின்றது

இந்த நால்வரில் இருவர் தமிழ்நாட்டுக்காரர்கள், இதுவே தமிழ்நாட்டு காவல்துறை சுட்டிருந்தால் இந்நேரம் திமுக முதல் பல அமைப்புகள் அய்யய்யோ காட்டுக்கு விறகு பொறுக்க சென்றவர்களை சுட்டார் பழனிச்சாமி என கிளம்புவார்கள்

நக்கீரன் போன்ற பத்திரிகை அதில் பாலியல் சமாச்சாரத்தையும் சேர்த்துகொள்ளும்

சுட்டது கேரள காவல்துறை என்பதால் இங்கு பூரண அமைதி..