சில திமுக ஜால்ராக்கள் புலம்பிகொண்டிருகின்றன‌

முக ஸ்டாலின் ஜல்லிகட்டை மீட்க அன்றே ஆலோசனை சொன்னார், அவர் சொன்னதுதான் நடந்தது என சில திமுக ஜால்ராக்கள் புலம்பிகொண்டிருகின்றன‌

உண்மை அது அல்ல, ஒரு காலமும் உண்மையே பேசகூடாது என சத்தியம் செய்திருப்பது திமுக கோஷ்டி

காங்கிரஸ் அரசு ஒரு விவகாரமான சட்டம் இயற்றி இருந்தது, அந்த சட்டத்தை வைத்துதான் ஜல்லிகட்டுக்கு தடை வாங்கியது அந்த பீட்டா அமைப்பு

அதாவது ஜல்லிகட்டு விளையாட்டினை மிருகவதை சட்டத்தில் சேர்த்திருந்தார்கள், காங்கிரஸ் அதை செய்யும் பொழுது கூட்டணியில் இருந்தது இதே திமுக‌

சட்டம் இப்படி இருக்கும் பொழுது உச்சநீதிமன்றம் தடை விதிக்கத்தான் செய்யும், இதனால் என்ன செய்யலாம் என அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம் சட்ட வல்லுநருடன் யோசிக்கும் பொழுதே மாநில அரசே இதை நடத்தலாம் என திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருந்தார் ஸ்டாலின்

“அய்யய்யோ இதென்ன இந்தாளு இப்படி இருக்காரு? சட்டமே தடையாக இருக்கும் பொழுது மாநில அரசு எப்படி நடத்தும்” என தலையில் அடித்துகொண்டு டெல்லிக்கு சென்றார் பன்னீர்

நிச்சயம் அந்த போராட்டத்தை பன்னீரால் முடக்கியிருக்கமுடியும், ஆனால் மக்கள்திரள் இல்லாவிட்டால் டெல்லியிடம் என்ன கேட்கமுடியும் என அட்டகாசமாக அனுமதித்தார்

பின் மத்திய அரசு ஜல்லிகட்டு விளையாட்டை மிருகவதை பிரிவில் இருந்து நீக்கியது, அதன் பின்பே விளையாட அனுமதி பிறப்பிக்கபட்டது

உண்மை இப்படி இருக்க, தமிழ்நாட்டிலே அனுமதி இருந்ததெனவும் அது தெரியாமல் பன்னீர் டெல்லிக்கு சென்றார் எனவும் டெல்லி ஸ்டாலின் செய்ய சொன்னதையே சொன்னது எனவும் திமுக பதர்கள் கடும் பொய்களை சொல்லி திரிகின்றன‌

முக ஸ்டாலின் சொன்னபடி செய்தால் சட்ட மீறலாகி மாபெரும் சிக்கலை பன்னீர் சந்தித்திருப்பார், அது நடக்கவில்லை என்ற சோகத்தில் பதர்கள் என்னவெல்லாமோ சொல்லி திரிகின்றன‌

திருத்தவே முடியாத , பொய் சொல்வதையே நோக்கமாக கொண்டவை இரண்டு

ஒன்று பாகிஸ்தான் இன்னொன்று திமுக அல்லக்கைகள்