வாட்சப்பில் பலரை உளவு பார்த்ததாக தகவல்கள்
இஸ்ரேலிய நிறுவணம் இந்தியாவில் வாட்சப்பில் பலரை உளவு பார்த்ததாக தகவல்கள் கசிகின்றனபிகாசுஸ் எனப்படும் நிறுவணம் மென்பொருளுக்கு பிரசித்தி பெற்றது அதன் தயாரிப்புகளே அறை கண்காணிப்பு இன்னும் பல கண்காணிப்பு விஷயங்களுக்கு பெயர்பெற்றவைஅந்த நிறுவணத்தின் உளவுபார்க்கும் மென்பொருள் வாட்சப் மூலமாக இந்தியாவில் இருக்கும் சமூக ஆர்வலருக்கு வந்து பதிந்தது அதன் மூலம் உளவு பார்க்கபட்டது எனும் சர்ச்சை வெடிக்கின்றதுஇப்பொழுது வாட்சப்பும் பேஸ்புக் வசம் இருப்பதால் பேஸ்புக் நிறுவணம் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கின்றதுஉங்களுக்கு உளவு விஷயங்களில் பரிட்சயம் இருந்தால் இதெல்லாம் வெறும் தூசு என்பதை உணர்ந்திருப்பீர்கள், அவ்வளவுக்கு முன்னேற்றமான கருவிகள் வந்துவிட்டனஇஸ்ரேலிகள் மகா கில்லாடிகள் என்பதும் அவர்கள் கடவுளை கூட உளவுபார்ப்பார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுஆனால் இந்தியர்களை அவர்கள் ஏன் உளவுபார்க்க வேண்டும்?
அதில்தான் இருக்கின்றது விஷயம்இங்கிருக்கும் சமூக ஆர்வலர், போராளிகள் இன்னபிற இம்சைகளில் 75% சுயநலமானவை எங்கிருந்தோ வரும் கட்டளைக்கு ஆடும் கூட்டம்அவர்களை மிக சரியாக கண்ணிவைத்து தூக்கியிருக்கின்றார்கள், சர்ச்சை வந்தவுடன் இம்மாதிரி மென்பொருளை அரசுகள் பயன்படுத்த மட்டும் அனுமதி என மிக பொருத்தமான பதிலை சொல்லிவிட்டார்கள்இந்தியாவில் ஏற்கனவே பாதுகாப்புக்காக போன்களை ஒட்டுகேட்கலாம் எனும் சட்டம் திருத்தம் செய்யபட்டிருப்பதையும் அதற்காக வைகோ போன்றவர்கள் குதித்துவிட்டு போன்களை தூர எறிந்ததாகவும் விஷயங்கள் உண்டுஇங்கு எதுவும் பெரும் ரகசியமல்ல , எல்லோரும் கண்காணிக்க பட்டுகொண்டுதான் இருகின்றோம், காதல் முதல் இன்னபிற சமாச்சாரம் வரை அவர்களுக்கு சிக்கல் இல்லை, அட வாட்சப்பில் பிளான் செய்து கொள்ளை கொலை என்றால் கூட அப்படியா என அவர்கள் போக்கில் இருப்பார்கள் அதை கண்டுபிடிப்பது காவல்துறை பணி என விட்டுவிடுவார்கள்ஆனால் தீவிரவாதம் , பெரும் குழப்பத்துக்கு திட்டம் வகுப்பது, தேசவிரோதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் இவற்றிற்கு திட்டமிட்டால் கோழிபோல் அமுக்கி கொண்டு செல்வார்கள்இது பல நாடுகளில் இருக்கும் நடைமுறை, மறைமுகமாக எல்லா இடத்திலும் உண்டுஆக விஷயம் சொல்வது இதுதான், இது மிக எளிதுஇந்தியாவில் போராளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என இம்சைகள் இன்னும் தேசத்தில் குழப்பம் விளைவிப்போரின் ஜாதகமே பெரும் சக்திக்கு தெரிந்திருகின்றது, அது யார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றோம்நமது பதிவுகளை வாசிப்பவர்களாக இருந்தால் அதை நீங்களே எளிதாக உணர்ந்துகொள்வீர்கள்இந்தியாவில் இப்பொழுதெல்லாம் பலத்த அமைதி என்பதையும் பெரும் போராட்ட இம்சைகள் இல்லை என்பதையும் வயிற்றேரிச்சலில் பலர் கத்திகொண்டிருப்பதையும் கூட்டி பெருக்கி பாருங்கள்உங்களுக்கே உண்மை புரியும்,அது அப்படித்தான்.யார் கத்தினாலும் குட்டிகரணம் அடித்தாலும் எங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டது என கத்தினாலும் ஒன்றும் ஆகபோவதில்லைவாட்சப் இன்னபிறவற்றில் இருந்து வெளிவந்தாலும் விடும் மூச்சில் கூட உளவு பார்க்கும் அட்டகாசமான வசதிகள் எல்லாம் அங்கு இருக்கின்றன