உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ

உலக அளவில் இந்த நாய்தான் இன்று சூப்பர் ஹீரோ , உலகமெல்லாம் கடும் வரவேற்பை பெற்றுவிட்டது, அதற்கு காரணம் டிரம்ப்

ஆம் அந்த அல்பக்தாதி எப்படி கொல்லபட்டான் என்பதை விளக்கிய டிரம்ப் , அவனை எங்கள் சிறப்பு படையின் நாய்கள் துரத்தி சென்றன, அதில் ஒரு நாய் அவனை கொல்லமுயன்ற பொழுது அவன் தன்னை வெடித்து செத்தான். அந்த நாய்க்கும் காயம் உண்டு ஆனால் ஆறிவிட்டது என சொல்லிவிட்டார்

அக்கணத்தில் இருந்து நாய் ஹீரோ ஆகிவிட்டது, ஆனால் நாய் எங்கே இருக்கின்றது அதன் குழு அடையாளம் எல்லாம் மறைக்கபட்டுவிட்டன‌

உண்மையில் அல்பத்தாதியினை சுற்றிவளைத்து நாயினை வைத்து விளையாடி பின் சுட்டு கொன்றிருகின்றார்கள் பின் கதை வசனத்தை எழுதிவிட்டார்கள்

மேலோட்டமாக இது நாயின் சாகசம் என பார்ப்பட்டாலும் உள்ளூர இது பல எள்ளல் மற்றும் எகத்த்தாளம் மற்றும் அகம்பாவத்தினை காட்டுகின்றது

சிரியாவில் இருந்து தோல்வியில் வெளியேறும் அமெரிக்கா ஒரு உலக பயங்கரவாதியினை எம் நாட்டு நாயே கொன்றுவிட்டது என்பது போன்ற இமேஜை ரஷ்யாவுக்கு சொல்லிவிட்டு வருகின்றது

இன்னொரு கோணம் சர்ச்சையானது அது சபையில் சொல்லமுடியாதது. இஸ்லாமிய அன்பர்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதால் சுருக்கமாக சொல்லிவிடுகின்றோம், இஸ்லாமிய மரபில் நாய்கள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல‌

ஆக அந்த மிருகத்தை வைத்தே ஒரு தீவிரவாதியினை கொன்றதில் பலத்த செய்திகளை உலகிற்கு சொல்லுகின்றார் டிரம்ப்

பொதுவாக இப்படி அமெரிக்க அதிபர்கள் செய்யமாட்டார்கள் அது சர்ச்சையாகும் என்பது தெரியும், இது அகம்பாவத்தின் உச்சியில் செய்யபடும் விஷயம்

எனினும் பல அமெரிக்கர்களை கழுத்தறுத்து கொன்ற இயக்கத்து தலைவனை இப்படித்தான் கொல்லவேண்டும் என்ற வரவேற்பும் டிரம்புக்கு உள்ளது.

இனி எப்படியாயினும் அமெரிக்க தேர்தலில் உலக பயங்கரவாதியினை நாயினை விட்டே கொன்றவன் நான் என முழங்குவார் டிரம்ப்

இந்த நாயினை வைத்து புத்தகம் கதை சினிமா என பரபரப்புக்கு தயாராகின்றது ஹாலிவுட்

அட இதை எல்லாம் நம்ம ஊர் சின்னப்ப தேவரும், ராம நாராயணனும் என்றோ கதைகளாக எடுத்துவிட்டார்கள் அல்லவா?

ஒருவேளை அம்மாதிரி தமிழ் சினிமா பார்த்துத்தான் அந்த “துர்கா” போன்ற படங்கள் சில விஜயகாந்த் படங்களை பார்த்துத்தான் அமெரிக்க ராணுவத்தார் அந்த நாயினை பயிற்றுவித்திருப்பார்களோ?