அதன் மூலம் சுவாரஸ்யமானது

நேற்று ஹாலோவின் டே என உலகெல்லாம் கொண்டாடினார்கள் குறிப்பாக ஐரோப்பாவும் அவர்களின் குடியேற்றமான அமெரிக்கா கனடாவும் கொண்டாடி தீர்த்தது

அதன் மூலம் சுவாரஸ்யமானது

அதாவது உலகம் மனிதர்களால் மட்டுமல்ல பேய்களாலும் நிரம்பியது என்பது எக்காலமும் உள்ள நம்பிக்கை, மனிதன் இருக்குமிடமெல்லாம் அதுவும் இருக்கும்

சீனர்கள் அதை வெடிவெடித்தும் இன்னும் பல வகைகளில் தாஜா செய்தும் விரட்டி பண்டிகை கொண்டாடுவார்கள், கிறிஸ்தவ காலடிபடாத சீனாவில் அது வழக்கில் உண்டு

ஐரோப்பாவில் அக்கால பேய்கள் இந்த ஐப்பசிமாதம் வந்து பயமுறுத்துமாம்,அது பனிகாலத்தின் தொடக்கம் என்கின்றார்கள்

அந்த காலகட்டத்தில் இறந்தவர் ஆவி வருமாம் இன்னும் என்னவெல்லாமோ வருமாம், பயமுறுத்துமாம்.

அந்த பேய்களை, நம் ஊரில் திருஷ்டி பூசனிக்காய் மற்றும் பயங்கர உருவங்களை நாம் வைத்திருப்பது போல அவர்கள் அதிபயங்கர உருவங்கள் செய்து பயம்காட்டுவதாக நம்பியிருக்கின்றார்கள்

ஆச்சரியமாக நம் ஊரில் திருஷ்டிக்கு கட்டபடும் தடியங்காய் பூசனிக்காயினையே அவர்களும் இன்றும் பயன்படுத்துகின்றார்கள்.

இந்த பண்டிகை ஒரு வாரம் நடந்திருகின்றது, கிறிஸ்தவம் அந்த ஐரோப்பாவினை கைபற்றிய பின் அந்த பேய் விரட்டும் விழா , புனிதர் விழா கல்லறை விழா என மாற்றபட்டு விட்டது. ஆயினும் கலாச்சாரத்தை விடாத ஐரோப்பா அதை கொண்டாடுகின்றது

உண்மையில் அப்பண்டிகை அந்த பேய்களை ரோமானிய, கிரேக்க அல்லது ஐரோப்பாவின் பண்டைய தெய்வங்கள் விரட்டுவது போலத்தான் தொடக்கம் இருந்திருக்கின்றது.

ஆனால் கிறிஸ்தவம் அந்த தெய்வங்களை மறைத்து அல்லது விரட்டிவிட்டு பண்டிகையினை தன் மத புனிதர்கள் கொண்டு மாற்றிவிட்டது.

இந்த பண்டிகை உலகெல்லாம் உண்டா? நிச்சயம் உண்டு

உலகில் தனித்துவமான இனம் என எதுவுமில்லை, எல்லா இனங்களும் தங்களுக்குள் பொதுவான சில விஷயங்களை கொண்டிருக்கும்

சீனாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பேய்விரட்டும் திருவிழா இந்தியாவில் மட்டும் இல்லாமல் போகுமா?

இங்கு கந்த ஷஷ்டி விரதம் என அனுசரிக்கபடுவதும், சூரனை முருகன் வதம் செய்தார் என கொண்டாடபடுவதும் அந்த வரிசையே

அசுரர் எனப்படும் தீய சக்தி
பேய் கூட்டத்தின் தலைவனை , தெய்வம் முருகனே வந்து கொன்று விரட்டினார் என கொண்டாடுகின்றது இந்துமதம்

அந்த சூரன் மூன்று முகம் எடுப்பதும் அதுவும் கோரமான முகத்துடன் வருவதையும் முருகன் அதை வெட்டி கொன்று அவனை இரண்டாக பிளப்பதையும் கவனித்தால், அதாவது சூரனின் கோர முகத்தையும் ஐரோப்பிய ஹாலோவின் உருவங்களையும் கவனித்தால் அந்த தொடர்பு புரியும்

ஆம் ஐரோப்பா பேய்கள் பல தந்திரம் செய்து ஏமாற்றுமாம், சூரனும் பல முகம் காட்டி ஏமாற்ற பார்த்தான் என்கின்றது கந்த புராணம்.

ஆக ஐரோப்பா கொண்டாடும் அந்த ஹாலோவின் திருவிழாவுக்கும் இந்தியாவின் குறிப்பாக ஷஷ்டி விரத சூர சம்ஹாரத்துக்கும் தொடர்பு உண்டு

அவர்களும் பேயினை விரட்டி கொண்டாடுகின்றார்கள், இங்கு பெருமானே வந்து பேய் கூட்ட தலைவனை வதம் செய்து மக்களை கொண்டாட வைக்கின்றான்

அவர்கள் காலவோட்டத்தில் கிறிஸ்தவர்களாகி இன்று கலாச்சார பண்டிகையாக கொண்டாடுகின்றார்கள், ஹாலோவின் என்றால் மாய அல்லது கண்ணுக்கு தெரியாத சக்தி என பொருள்

முன்பு அவர்கள் பேய்களை தங்கள் தெய்வம் விரட்டியதாக நம்பினார்கள், பின்பு கிறிஸ்தவ தெய்வங்கள் விரட்டியதாக நம்புகின்றார்கள் அப்படியே கல்லறையிலும் வணங்கி ஆவிகளை சாந்தபடுத்துகின்றார்கள்

த‌மிழகம் அதை பல்லாயிரம் ஆண்டு தொடர்ச்சியாக பயபக்தியுடன் தன் கடவுளின் பெயரால் கொண்டாடுகின்றது

இங்கு நாமோ எல்லா பேய்களையும் முருகன் பார்த்துகொள்வார் என சூரசம்ஹாரம் நடத்தி பெரும் நிம்மதி அடைகின்றோம்..

உலகையும் உலக பண்டிகையினையும் ஆழமாக கவனியுங்கள், அவர்களின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் இந்துமதம் கலந்தே இருக்கும்.

அதன் மாபெரும் முத்திரை அது, எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அது காலம் வரும்பொழுது மீண்டெழுந்து ஜோதியாக ஜொலித்து கொண்டே இருக்கும்