வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை

குறள் என்பது இலக்கண வடிவம், யாரும் எழுதலாம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றோர் எழுதி தொகுத்த நூல் என்ற அனுமானமும் உண்டு

வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை, ஓலைசுவடியில் குறள் இருந்தது பெற்றோம் அவ்வளவே. இதில் காணாமல் போனது, கரையான் அரித்தது எவ்வளவோ

மிக சில பண்டைய இலக்கியங்களில் வள்ளுவனின் குறள் என வந்திருப்பதால்தான் குறளை எழுதியது அவர் என்ற முடிவுக்கே வந்தார்கள்

வள்ளுவன் மனைவி வாசுகி என்பதெல்லாம் ஆதாரமில்லா புனைவுகள்

அவர் சமணர், கிறிஸ்தவர் , பவுத்தர் என சொல்வதிலும் அர்த்தமே இல்லை,

அவர் தீவிரமான இந்து என்பது குறளிலே தெரிகின்றது.

அவர் குறளின் வார்த்தைகளை கண்டால் அது மலையாளத்தில் பயன்படுத்தபடும் ஆதி தமிழ்வார்த்தைகளே அன்றி வேறல்ல‌

அதனால் கன்னியாகுமரி பக்கம் பிறந்திருக்கலாம் என்கின்றார்கள், அங்கு நாஞ்சில்நாடு போல வள்ளுவ நாடும் உண்டு

ஆங்கிலேயர் இங்கு கொண்டாடிய நூல்களில் திருகுறளும் ஒன்று என்பது பெருமை

திருகுறளில் சமண புத்த தாக்கம், யூத ஞானத்தின் தாக்கம் என சில சாயல்களும் உண்டென்றாலும் நல்ல கருத்துக்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை

திருவள்ளுவன் ஒரு இடத்திலும் தமிழ் என்றோ தமிழர் என்றோ சொல்லாத பொழுது அவரை மட்டும் ஏன் தமிழர் அடையாளம் ஆக்கினார்கள்?

காரணம் உண்டு

தமிழின் மற்ற காப்பியம் எல்லாம் கடவுள் நம்பிக்கையினை சொல்பவை. இந்து மதம், புத்தம்தம் இன்னும் பல கடவுள்களை சொல்லும்

குறள் கடவுளை நேரடியாக சொல்லாது, மாறாக இந்திரன் போல சில இடங்களில் மென்மையாக சொல்லும்

மற்ற நூல்களை எடுத்தால் அதாவது நாலடியார் , மூதுரை போன்ற திருகுறளை போன்ற நீதிநூல்களை எடுத்தால் கடவுள் வருவார், தமிழனுக்கு மதம் உண்டு என்ற சர்ச்சை வரும் என்பதால் தந்திரமாக வள்ளுவனை மட்டும் எடுத்தார்கள்

தமிழன் மதமற்றவன் காட்டுமிராண்டி அவனுக்கு நல்வழி காட்ட இயேசு ஒருவரே உண்டு என சொல்ல வெள்ளையருக்கும் அது வாய்ப்பாயிற்று

இதனால்தான் பிரிட்டன் அரசின் அந்திம காலங்களில் இங்கு திருகுறள் ஆராய்ச்சி பின்னியது, வள்ளுவன் தெய்வமாக்கபட்டான்

எல்லீஸ், கால்டுவெல் எல்லாம் திருகுறளை கொண்டாடினாலும், திராவிட சிங்கங்கள் பாய்ச்சல் காட்டின‌

அக்காலத்தில் வள்ளுவன் சிலை என ஒன்றை ஆங்கில கவர்னர் எல்லீசுக்கு காட்டினார்கள், அவனும் அதை நாணயத்தில் எல்லாம் வைத்திருந்தான்

ஆனால் அந்த படத்திற்கு பூனூல் உண்டு, பின்னாளில் அந்த பூனூலை கழற்றிவிட்டு திராவிட சிங்கங்கள் வள்ளுவனை கண்டன‌

தேவாரம், திருவாசகத்தை எல்லாம் மறக்கடித்து தமிழன் மண்டையினை கழுவ அவர்களுக்கு திருகுறள் எனும் சலவை சோப் கிடைத்தது

கம்பன், கபிலர், ஓளவையார், புகழேந்தி புலவர், இளங்கோவடிகள் என ஏராளமான புலவர்கள் இருந்த தமிழகத்தில் வள்ளுவனை மட்டும் தேடோ தேடு என தேடினர்

அவர்களாக குறளின் தன்மை பொறுத்து திருவள்ளுவர் இப்போது பிறந்திருக்கலாம் என முடிவும் செய்தார்கள்

திருவள்ளுவர் ஆண்டினை அறிவித்தார்கள்

இதெல்லாம் அனுமானமே, யூகமே தவிர வள்ளுவன் இன்றுதான் பிறந்தான் என்பதற்கு ஆதாரமே இல்லை

எல்லாம் எதை நோக்கியோ உருவாக்கபட்டவை, அதன் பின்பு திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றெல்லாம் கதைகள் வந்தன‌

எல்லாம் பொய்

வள்ளுவன் அற்புதமான தமிழ் ஞானி, மகா நல்ல கருத்துக்களை குறளாக தந்தான் , தமிழர் அடையாளம்

மற்றபடி அவன் இன்றுதான் பிறந்தான் இந்த நொடியில்தான் அவதரித்தான், இதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதெல்லாம் அரசியல்

நாலடியாரையும், மூதுரையினையும் இன்னும் பல நல்ல தமிழ் நீதி நூல்களை எல்லாம் விட்டுவிட்டு குறளை மட்டும் பேருந்து முதல் பஞ்சாயத்து அலுவலக கழிவறை வரை எழுதி வைத்தது எல்லாம் அரசியல்

தமிழர் தனி இனம், இந்தியரோடு ஒட்டமாட்டோம் ஒட்டவும் கூடாது என்பதற்காக வலிந்து திணிக்கபட்ட அரசியல்

வள்ளுவ நாயனார் என்றிருந்த பெயரையே தந்திரமாக திருவள்ளுவன் என மாற்றிய திராவிட நச்சுபாம்பு நரிகோஷ்டி இது.

வேறோன்றுமில்லை

வள்ளுவனுக்கு தமிழன் காவி உடை உடுத்தாமல் வேறு எவன் உடுத்துவான்?

குறளை முறையாக கற்றவனும் அதை உள்ளூர உணர்ந்தவனுமே வள்ளுவன் ஓர் இந்து என்பதை உணரமுடியும், மாறாக வாக்கு ஒன்றுக்காக படித்தவனும் வீம்புக்கு அதை கிளறிபார்த்தவனுக்கு வள்ளுவன் இந்து அல்ல என்றுதான் தெரியும்

பெரியார் எனும் ஈரோட்டு ராமசாமியே வள்ளுவன் ஓர் பார்பானிய அடிமை என சொன்னபின் வேறு என்ன ஆதாரம் இவர்களுக்கு வேண்டியிருக்கின்றது?