நல்ல வேளை

தஞ்சாவூர் கோவில் காலவோட்டத்தில் சோழனுக்கு பின் கலை இழந்தது, அதை கட்டியவன் யார் என கூட தெரியவில்லை, நாயக்கர்கள் அதை ஒருமாதிரியாக கையாண்டனர்

ஒரு ஜெர்மானியன் வந்துதான் இங்கு ஓலைசுவடிகளை தேடவும் கல்வெட்டுகளை படிக்கவும் வந்துதான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜ சோழன் என சொல்லிகொடுத்தான்

ஆம் ஒரு ஜெர்மானியனே நம் கலை உச்சத்தின் பிதாமகனை நமக்கு சொல்லி சென்றான்

சொல்லி சென்றவன் சும்மாவா சென்றான்? இங்கிருக்கும் பல விஷயங்களை தோண்டினான், ஆதிச்சநல்லூர் நாகரீகம் முதல் கிழக்கு கடற்கரை தாதுமணல் வரை அவன் அன்றே சொன்ன விஷயங்கள்

தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்து அவன் அள்ளி சென்ற தகவல்கள் கொஞ்சமல்ல, அதன் பின்புதான் ஜெர்மனி பாய்ச்சல் காட்டியது

ஏன் சொல்கின்றோம் என்றால் நல்ல வேளையாக திருவள்ளுவருக்கு வள்ளுவனுக்கு சில அடையாளங்களை வைத்து அவரை நிர்மானித்துவிட்டோம்

இல்லையெனில் 100 வருடம் கழித்து திருகுறளை எழுதியது ஈரோட்டு ராமசாமி என வரலாற்றை மாற்றுவார்கள், வருங்கால சந்ததி கன்னியாகுமரியில் 133 அடி பெரியாரின் சிலையினை ஆனந்தமாக வணங்கி கொண்டிருக்கும்

பெரியார் எழுதிய குறளுக்கு அவர் சீடர் கருணாநிதி உரை எழுதி சிலை அமைத்தார் என்ற அளவு நிலமை மோசமாகியிருக்கும்