இங்கே வேண்டாம்

நாம் நம் கருத்தை சொல்கின்றோம், அடுத்த விஷயங்களுக்கு செல்கின்றோம்

ஆனால் எப்பொழுதாவது திரும்பி பார்த்தால் கமெண்டில் ஆளாளுக்கு மிக மிக தரம்கெட்ட வார்த்தைகளால் சண்டையிட்டு கொண்டிருக்கின்றார்கள்

புலவர்களே தயவு செய்து சாந்தமாக உரையாடுங்கள் என மன்றாடினாலும் “நீ பொத்தினு போடா, நானா அவனான்னு பார்த்துரலாம்” என நம்மையே பொடரியில் அடிகின்றார்கள்

இந்த கமெண்ட் வீரர்கள் சண்டையிட விரும்பினால் நல்ல குளத்து மைதானத்தை ராதாபுரம் பக்கம் நாமே ஏற்பாடு செய்து தருகின்றோம், ஆம் எந்த வெள்ளத்திலும் நிரம்பாத குளங்கள் சில உண்டு

மழையினால் உங்கள் ஆட்டம் தடைபடாது, தடுக்கவும் யாரும் இல்லை. தயவு செய்து அங்கே சென்று வெட்டிகொண்டு சாகவும்

இங்கே வேண்டாம்