அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது

தமிழ் பதிப்புலகம் அதாவது புத்தக பதிப்பாளர்களை எப்படி தெருவுக்கு கொண்டுவருவது என திட்டமிட்ட அமேசான் அட்டகாசமான உத்தியினை கையில் எடுத்திருக்கின்றது

ஒரு வகையில் அதுதான் இனி எதிர்காலமும் கூட‌

தமிழ் நாவல்களை கதைகளை இங்கே எழுதி சம்பாதியுங்கள் என போர்டு வைத்துவிட்டு ஒதுங்கி கொண்டது, அவர்களுக்கென்ன சர்வரில் இடமளித்தால் போதும்

போதாதா?

ஆளாளுக்கு எழுதி குவிக்கின்றார்கள், ஒரு சிலர் சம்பாதிக்கிறேன் டோவ் என சத்தம் வேறு

இதில் திமுக தரப்பும் புகுந்து திராவிட கதைகளை எழுதி தள்ளுகின்றது. அண்ணா கருணாநிதி என பெரும் கதாசிரியர்கள் வழி வந்த கட்சி இங்கும் கதை எழுதாவிட்டால்தான் ஆச்சரியம்

இதில் ஆங்காங்கே உரசலும் நடக்கின்றது

அப்படியே இந்த இம்சை இலக்கியவாதிகளின் படைப்பையும் அவர்களையும் சேர்த்து அமேசான் நதியில் இந்த அமேசான் நிறுவணம் தள்ளுமானால் மிக்க நல்லது

இது வேடிக்கை போல் தோன்றினாலும் பெரும் பதிப்பகங்களுக்கும் பத்திரிகைகளுக்குமான எச்சரிக்கை மணி

இனி பல பதிப்பகமும் பத்திரிகையும் மூடபடலாம், மொத்த இலக்கிய உலக கதைகளுக்கும் அமேசான் ஏகபோக முதலாளியாகலாம்

ஒரு பெரும் மாற்றம் ஓசைபடாமல் ஆரம்பிக்கின்றது, வெகுவிரைவில் இதன் பாதிப்பினை பதிப்பக மற்றும் பத்திரிகை உலகம் உணரும்..