எங்கே சொல்லட்டும் பார்க்கலாம்..

அதானே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவன் தான் சொல்லமுடியும்

அவர்கள் கட்சி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சரியாகத்தான் இருக்கின்றது , யாரோ தலைவர், பிரதமர், அமைச்சர், கவர்ணர் என ஆக முடிகின்றது

ஆக அவர்கள் குறளை ஒழுங்காகத்தானே பின்பற்றுகின்றார்கள்?

இந்த கட்சி அப்படியா?

எங்கே? இவர் “பிறப்பொக்கும் எல்லா திமுக உடன்பிறப்பும்” என சொல்லட்டும் பார்க்கலாம், முடியாது, காரணம் திமுகவில் ஆள ஒரு குடும்பம் மாள பல குடும்பம்

தலமை முதல் மாவட்ட செயலாளர் வரை அதுதான் நிலை

ஆக திமுகவின் குறள், “பிறப்பொக்காது எல்லா திமுக உடன்பிறப்புக்கும்”

அவர்கள் திருக்குறள் படித்து திருந்துவது இருக்கட்டும், ஒரு குறளை உருப்படியாக சொல்ல இவர் தயாரா?

எங்கே சொல்லட்டும் பார்க்கலாம்..

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை”