பின்ன எதுக்குடா வள்ளுவருன்னு கொடி பிடிச்சிட்டு வற்றீங்க…

“ஏண்டா அவர் சொன்னமாதிரி கடவுள் வாழ்த்து பாடியிருப்ப?

ஹஹிஹிஹி பகுத்தறிவுண்ணே, கடவுளே இல்லை

அவர் சொன்னமாதிரி நீர் மேலாண்மை செய்திருப்ப?

இல்லண்ணே

அவர் சொன்னமாதிரி புலால் மறுத்திருப்ப?

அண்ணே அசைவம் சாப்பிடாம என்ன சாப்டுறது, நான் என்ன பார்ப்பானா?

அவர் சொன்னமாதிரி பொய் சொல்லாம இருந்திருப்ப?

கிகிகி பின்ன அரசியல் எப்படிண்ணே?

அவர் சொன்ன கள்ளுண்ணாமை?

அட அது இல்லாம கட்சியுமில்ல அரசுமில்ல தேர்தலுமில்ல

வள்ளுவர் படிக்க சொன்னாரா? சினிமாபடம் எடுக்க சொன்னாரா?

படிக்க சொன்னாரு

நீங்க குடிக்க சொன்னீங்க, ஒரு பயல உருப்பட விட்டீங்களாடா?

இல்ல…அது டெல்லி சதி, ஆரிய பாசிசம்..

இந்த பிறர்மனை நோக்காமை?

ஹிஹிஹி ஏகபட்ட பொண்டாட்டிண்ணே, பாதி அடுத்தவனோடது

அவர் சொன்னமாதிரி புள்ளையாவது ஒழுங்கா வளர்த்தீங்களா?

நாங்க எங்க வளர்க்க? அதுவா வளர்ந்துச்சி.. உருப்படாம போச்சி

அட கருமாந்திரமே, ஆட்சியாவது அவர் சொன்னமாதிரி செஞ்சீங்களடா?

அட அவர் சொன்னதெல்லாம் இப்போ சரிவராதுண்ணே

அவர் சொன்னது ஒரு வரி வாழ்ந்தீங்களா? இல்ல கடைபிடிச்சீங்களா?

ஊரெல்லாம் எழுதி வச்சது யாருண்ணே நாங்க..

அடேய் எழுதறது ஈசிடா, அவர் சொன்னது ஏதாவது செஞ்சீங்களா?

அதெல்லாம் மனுஷன் செய்வானா? அவர் ஏதேதோ சொல்லிட்டு போயிட்டாரு விடுங்கண்ணே..

பின்ன எதுக்குடா வள்ளுவருன்னு கொடி பிடிச்சிட்டு வற்றீங்க…

அண்ணே நீங்க ஒரு சங்கி…”