ஆசியாவின் இரண்டாம் செங்கிஸ்கான்

இந்த இந்தோ சைனா நாடுகள் சுமார் அரை டஜனுக்கு ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் ஏசியான்

அந்த பகுதி அந்தமானை தாண்டினால் வரும் பகுதி என்பதும் அதை கடந்தால் பசிபிக் கடலும் சீன அமெரிக்க ஜப்பானிய மோதலும் நடக்கும் பகுதி என்பதும் உலகறிந்தது

முதலில் அந்த பிராந்தியத்தை கையில் வைத்தது பிரிட்டன், பின் ஜப்பான் அதை முறியடித்து கையில் எடுத்தது, இன்று அந்த பிராந்தியம் சீனாவுக்கா அமெரிக்காவுக்கா என்பது போட்டி

இதில் இந்தியாவும் இப்பொழுது குதித்திருப்பது தெரிகின்றது

பொதுவாக ஏசியானுக்கு பெரும் தலைகள் செல்லாது, அமைச்சர்களை அனுப்பிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள், ஆனால் மோடி சென்று பல காரியங்களை செய்திருக்கின்றார்

தமிழகத்துடன் தொடர்புடைய பகுதிகள் என்பதால் திருகுறளில் பேசியது முதல் திருகுறள் பதிப்பினை வெளியிட்டது என அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தார்

தொடர்ந்து தாய்லாந்துடன் மகா முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்

பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருக்கும் நாடு என்பதுடன், கிழக்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என தாய்லாந்துக்கும் சில முக்கியத்துவம் உண்டு

வியட்நாம் யுத்தத்தின் பொழுது அமெரிக்க களமாக தாய்லாந்தே திகழ்ந்தது, மறைமுகமாக அமெரிக்க பிடி அங்கு உண்டு

தாய்லாந்தில் மோடி கால்வைத்து வந்திருப்பது சீன பிடியில் இருக்கும் பர்மா மற்றும் இதர நாடுகளின் புருவத்தை சுருக்க வைத்திருக்கின்றன‌

நல்ல நகர்வுகளை செய்கின்றது அரசு

அவர் சங்கி அல்ல மாறாக ஆசியாவின் இரண்டாம் செங்கிஸ்கான் என்பது போல் இருக்கின்றது நகர்வுகள்..