அந்தோ பரிதாபம்

பழந்தமிழர் எல்லா வாழ்வியல் விஷயங்களுக்கும் பாடலும் செய்யுளும் வைத்திருந்தனர்

ஆலயங்களுக்கு பாட ஒரு வகை பாடல், அரசனுக்கு போதிக்க நீதி, சமூக வாழ்வுக்கான இலக்கியங்கள் என எல்லாம் செம்மைபடுத்தபட்டிருந்தன‌

அக்காலத்தில் கோவில் மண்டபங்களில் சொற்பொழிவும் உபன்யாசமும் நடைபெறும், அப்பாடல்களின் பொருளை விளக்கி சொல்வார்கள்

திருவிழா போன்ற கொண்ட்டாட்டங்களில் அவை தவறாமல் நடைபெறும், இன்னும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் மேதைகளும் ஞானிகளும் விளக்குவார்கள்

எல்லா பாடல்களும் நீதி நெறிகளும் செய்யுளும் அப்படி விளக்கபட்டவைதான், கம்பனின் ராமாயணமும் ஆண்டாளின் பாடலும் மகாபாரதமும் இன்னும் பலவும் அப்படி விளக்கி சொல்லபட்டது

திருகுறளும் அப்படி ஆங்காங்கே சொல்லபட்டும் விளக்கபட்டும் இருந்த நூல்தான்,

மறைத்து எங்கும் வைக்கபடவில்லை

தமிழகத்தில் மற்றும் வெள்ளையன் ஆட்சி வந்த பின் அது சுருக தொடங்கியது காரணம் கோவில்களுக்கான நிதி தட்டுப்பாடு முதல் மன்னர்கள் தடுமாற ஆரம்பித்த காலம் அவை

பின் அந்த ஏடுகள் மறைய தொடங்கின, தமிழரும் மேற்கத்திய நாகரிகம்பால் திரும்ப ஆரம்பித்தார்கள்

கல்வி முறையே மாற தொடங்கியபின் அவை அவசியமில்லாதவை ஆயின, செவிவழி செய்திகளாகவும் பாடலாகவும் இருந்தன‌

எனினும் எல்லீசன் போன்ற வெள்ளையர்கள் ஆட்சிக்காக தமிழ்படித்து பின் தமிழ் அறிஞர்களாக மாறினர், அவர்களை போன்றவர்கள் தங்கள் மொழிக்கு மாற்றி மகிழ்ந்தனர், மூலபிரதி பற்றி அதிகம் அக்கறை கொள்ளவில்லை

ஆனால் அந்த ஏடுகள் ஆதீனங்களிலும் கோவில்களில் ரகசிய அறையிலும் குவிந்திருந்தன, அச்சுமுறை வந்தபின் அவற்றை தேடி தேடி பிடித்து புத்தகமாக்கினார் சாமிநாதய்யர்

அவர் ஒரு பிராமணர்

அதன் பின் திருகுறள் அச்சிக்கு வந்து எல்லோர் கையிலும் கிடைத்தது, ஆளாளுக்கு உரை எழுதி அழிச்சாட்டியம் செய்தார்கள், கருணாநிதியும் செய்தார்

அதிலிருந்து பிடித்தது வள்ளுவனுக்கு சனி, அவர் இன்று படாதபாடு படுகின்றனர்

இன்று வள்ளுவனுக்கு காவி உடை அணிந்ததும் பொங்குபவர் யாரென உற்று பார்த்தால் திக, திமுக, இஸ்லாமிய, கிறிஸ்தவ அன்பர்கள்

இவர்களில் முன்னோர் ஒரு காலத்தில் காவி உடை அணிந்த இந்து துறவிகள் இதே குறளுக்கு விளக்கம் கொடுக்க முன் வரிசையில் அமர்ந்து கேட்டிருப்பார்கள் என்பதுதான் ஆச்சரியம்

ஆம் இமயம் முதல் குமரி வரை காவி துறவிகளின் ஞானிகளின் அடையாளமாக கருதபட்டது, அது பிராமண அடையாளம் அல்ல‌

கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் அவ்வையும் பிராமணர் அல்ல, சீத்தலை சாத்தனாரும் புகழேந்தியும் ஒட்ட கூத்தனும் பிராமணர் அல்ல‌

காவி என்பது மதிப்பிற்குரிய துறவிகளுக்கான உடை

அந்த காவியின் மகிமை உணர்ந்து தொடக்ககால கிறிஸ்தவ பாதிரிகள் கூட காவி உடையில் அலைந்திருக்கின்றார்கள்

அதை வள்ளுவனுக்கும் சூட்டி மகிழ்ந்தார்கள் தமிழர்களும்

வள்ளுவன் ஒரு தெய்வீக புலவன் என கொண்டாடிய தமிழகம் தெய்வ துறவிகளுக்கேற்ற காவியும் விபூதியும் அணிவித்து அவனை வணங்கியிருக்கின்றது.

தங்கள் முன்னோர்கள் மகிழ்வுடன் வணங்கி காதார கேட்ட குறளையும் அவர்கள் போற்றிய இந்து வள்ளுவனையும் எங்கிருந்தோ வந்தவன் திட்டமிட்டு சொன்ன காரணத்திற்காக பழிக்க தொடங்கியிருக்கின்றது ஒரு கூட்டம்,

அந்தோ பரிதாபம்.