எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும்
எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும், முன்பு அப்படித்தான் இருந்தது பின்னாளில் யாரும் எதையும் பேசலாம் எழுதலாம் எனும் நிலை வந்ததுதான் மகா சிக்கலுக்கு காரணம்
மிகபெரும் உதாரணம் கருணாநிதியின் திருகுறள் உரையும் தொல்காப்பிய பூங்காவும்
குறைந்தபட்சம் தமிழ்புலவர் படிப்பாவது முடித்திருப்பவனே திருகுறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் உரை எழுத வேண்டும் 6ம் வகுப்பு பெயிலானவன் எல்லாம் எழுதும் உரை ஏற்கபடாது என்றொரு சட்டம் இயற்றபட்டிருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது.
இதுகளுக்கு தமிழும் சரியாக தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது அதாவது மூலமே சரியாக தெரியாது
இவர்கள் மொழிபெயர்ப்பும் அதன் பொருளும் எப்படி இருக்கும்? அண்ணா கம்பரசம் எழுதியது போலத்தான் இருக்கும்
பெரியாருக்கு கண்டபடி தமிழ் இலக்கியங்களை விமர்சிக்கும் உரிமையினை கொடுத்தது எவன்?
இலங்கையில் புலிகள் நாங்களே எல்லாம் என ஆட்டம் போட்டு அழிந்தது போல் இங்கொரு கோஷ்டி அதுவாக ஆடி எல்லாவற்றையும் நாசமாக்கியிருக்கின்றது
அம்பேத்கர் சட்டம் இயற்றினாரென்றால் ஒரு தகுதி இருந்தது, தமிழக திராவிர கும்பல்களுக்கு தமிழை கண்டபடி மொழி பெயர்க்க என்ன கல்வி தகுதி அல்லது வேறு தகுதி இருந்தது என்பதுதான் தெரியவில்லை
அரைகுறை படிப்பாளிகளெல்லாம் கீதை, திருகுறளை எல்லாம் கண்டபடி மொழிபெயத்துத்தான் இப்படி ஆகிவிட்டது தமிழ்நாடு.
யார் கொடுத்த அதிகாரம் இது?
இந்த திராவிட கோஷ்டி இவர்கள் அரைகுறை அறிவில் இந்த பைபிளையும் குரானையும் மொழிபெயர்த்திருந்தால் அன்று தெரிந்திருக்கும் செய்தி
அதனால் கவனமாக அந்த பக்கமே செல்லாமல் இங்கே இந்துமத மூல புத்தகங்களை மொழிபெயர்க்கின்றோம் என அழிச்சாட்டியம் ஆரம்பித்துவிட்டார்கள்
மூலமும் தெரியாது, முடிவும் தெரியாது மாறாக அவர்களும் குழம்பி தமிழர்களையும் குழப்பி அரசியல் செய்வது அவர்கள் தொழில்..
இந்த திராவிட கோஷ்டிகள் தமிழர்களின் மதம், கலாச்சாரம் இன்னபிற விஷயங்களுக்கு ஏக போக அத்தாரிட்டிகள் என்பதை ஒழிக்காமல் தமிழகம் உருப்படாது