எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

ராஜிவ் காலம் வரை காங்கிரஸ் தமிழகத்தை சரியாக அணுகியது, அதன் பின்பு சோனியா எடுத்தமுடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமானவை

ஒரு பிரிவினைவாத கட்சியான அதற்கு சோனியா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இன்றுவரை மர்மமே, கருணாநிதி திட்டாத ஒரே டெல்லி தலமை சோனியாவே

சோனியா தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க என்ன செய்தார்? நிச்சயம் 2006ல் இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்திருக்க வேண்டும், காங்கிரஸ் வளர்ந்திருக்கும், ஆனால் ஏன் சோனியா செய்யவில்லை?

சந்தேகங்கள் இன்னும் வலுக்கின்றன‌

நல்லவரோ கெட்டவரோ மோடி முடிந்த அளவு தமிழ்நாட்டோடு ஒட்ட முனைகின்றார், கோவா தளத்துக்கு சோழன் பெயரிடுகின்றார்

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையோடு வருகின்றார், திருகுறள் முதல் பல விஷயங்களை கணியன் பூங்குன்றனாரை உலக மேடைகளுக்கு எடுத்து செல்கின்றார்

ஆனால் காங்கிரஸ் இதை செய்யாதது ஏன்?

ஏன் சோனியாவின் காங்கிரஸ் திமுகவின் ஊதுகுழலாக மட்டும் இருந்தது, திமுகவினை தாங்கிபிடித்து அது வளராமல் போன மர்மம் என்ன?

எந்த சக்தி மோடி தமிழகத்தோடு ஒட்டுவது போல் சோனியாவினை இங்கு ஒட்டவிடாமல் தடுத்தது

ஏன் மோடி செய்வதை எல்லாம் காங்கிரஸால் செய்யமுடியவில்லை? வேண்டுமென்றே தவிர்த்தது யார்?

இவ்வளவுக்கும் ராஜிவ் உயிர்நீத்த இடம் சென்னை அருகே இருந்தும் சோனியாவும் ராகுலும் அங்கு வராமல் கோபாலபுரம் ஓடியது ஏன்?

உர வழக்கில் அழகிரி தப்பியது எப்படி? கனிமொழி வழக்கில் பைல்கள் காணாமல் போனது எப்படி?

பலத்த மர்மங்கள் அதில் உண்டு, கடைசியாக மாநில கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கை காங்கிரசால் அறிவிக்கபட்டு அது மண்ணை கவ்விய கதையும் உண்டு

எங்கோ காங்கிரஸ் திமுகவிடம் வகையாக சிக்கி கிடக்கின்றது, அது திமுகவுக்கு அஞ்சுகின்றது.

திமுகவின் எல்லா கோரிக்கைக்கும் அது தலையாட்டுவதில் ஏதோ பெரும் மர்மம் உள்ளதா இல்லையா?

திமுகவே தமிழருக்கான அமைப்பு நாமெல்லாம் வட இந்திய அமைப்பு என ஒதுங்கி மண்டியிட்டு கிடக்கின்றது காங்கிரஸ்

ஆனால் திமுகவால் பாஜகவினை தொடமுடியவில்லை

திமுக மட்டும்தான் தமிழர் அடையாளமா? தமிழ்நாடு இந்திய அடையாளமில்லையா? வள்ளுவனும் இன்னும் பல விஷயமும் இந்திய பெருமிதம் இல்லையா? என பிஜேபி வரும்பொழுது திமுக தடுமாறுகின்றது, அலறுகின்றது

திமுக தமிழ்நாட்டை தமிழக அடையாளத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றதா? என கேள்வி கேட்கின்றது பாஜக, சரியான கேள்வி. ஆனால் காங்கிரஸ் ஏன் இதுகாலமும் கேட்கவில்லை?

சிக்கல் எம்மிடம் இல்லை உங்கள் கட்சியிடம்தான் உள்ளது, உங்கள் கட்சி செயாததை பாஜக செய்யும்பொழுது வாழ்த்தித்தான் தீரவேண்டும்

ஆக எம்மை திட்டுவதற்கு முன் மோடியினை திட்டுவதற்கு முன் சோனியாவினையும் டெல்லி காங்கிரசையும் நினைத்து பாருங்கள், உங்கள் கட்சிமேலான குற்றசாட்டுக்கள் ஏராளம் உங்கள் மனதிலே உதிக்கும்