அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

மேடைகளிலும் சபைகளிலும் நாகரீகம் தேவைதான், மறுக்க முடியாது

ஆனால் அந்த பயல், இவன், அந்த யோக்கியம் இல்லாதவன், காட்டுமிராண்டி பயல், சிவபெருமான் எனும் பயல், விஷ்னு எனும் பயல் என முதன் முதலில் “நாகரீகத்தை” கற்று கொடுத்தது யார்?

ஆக ஈரோட்டு ராம்சாமி திருவள்ளுவரை பேசலாம், புலவர்களை பேசலாம், மாணிக்கவாசகரை பேசலாம்

கடவுள்களை பேசலாம், பார்ப்பான் பாப்பான் என சொல்லலாம், பாப்பான் இருக்கானே அவன விரட்டனும் என நாகரீக கொங்கு தமிழ் பேசலாம்

அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

நாகரீகத்தை பற்றி திக திமுக அன்பர்கள் பேசலமா? ஒரு தகுதி வேண்டாமா?

எந்த அவதாரத்தையும், புலவனையும், மேதைகளையும், ஞானிகளையும் அவர் வாய்க்கு வந்தபடி பேசினால் அது புரட்சி

மற்றவர் பேசினால் நாகரீகமின்மை.. அப்படித்தானே?

நீங்கள் வணங்கும் அவரை பேசினால் எப்படி வலிக்கின்றது? உங்களுக்கு வலிக்கின்றதல்லவா?

இப்படித்தானே அவர் பேசும்பொழுது மற்றவருக்கும் வலித்திருக்கும்?

நாகரீகத்தை எம்மிடம் தேடுமுன் உங்கள் குருநாதனிடம் தேடிவிட்டு வாருங்கள்..