சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு
வழக்கம் போல சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு
காவல்கிணற்றில் ரயில் நிலையத்தை மீட்டார்கள் அதாவது காவல்கிணற்றில் முன்பு சில ரயில்கள் நிற்காமல் செல்லும் , அதை மீட்டெடுத்து வெற்றிமுரசு கொட்டினார் தற்போதைய எம்பி ஞானதிரவியம்
ஆனால் அந்த மாபெரும் வெற்றிவிழாவுக்கு அப்பாவு செல்லவில்லை, ஒரு தரப்பு ஏன் என விசாரிக்க அவரின் மகனுக்கு திருமணம் என செய்திவந்தது
திருமணமா? ஏதாவது சிக்குவாரா பார்ப்ப்போம் என தூண்டிலோடு கிளம்பிய கோஷ்டிக்கு பேனர் விவகாரம் கிடைத்துவிட்டது
பணகுடியில் போக்குவரத்தை பேனர் வைத்து இடைஞ்சல் செய்தார் என வழக்கு தொடர வைத்துவிட்டார்கள்
அப்பாவுக்கு இப்பொழுது பல கேள்விகள்
ஏன் பேனர் வைத்து போக்குவரத்தை(?) இடைஞ்சல் செய்தீர் என காவல்துறை கேட்கின்றது, அதென்ன நியூயார்க் பாஸ்டன் போக்குவரத்து சாலையா? என அப்பாவு மனதுக்குள் மட்டும் கேட்டுகொள்ளலாம், சத்தம் போட்டு சொல்லமுடியாது
கட்சி மேலிடத்தில் இருந்தோ தம்பி உதயநிதி படமில்லாமல் என்ன பேனர் என்ற விசாரிப்பும், கனிமொழி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை குரல்கள் வருகின்றதாம்
கடும் கடுப்பில் அமர்ந்திருக்கின்றார் அப்பாவு, எல்லாம் தீர்ப்புவரும் வரைதான் அதன் பின் நானே எம்.எல்.ஏ இதே போலிஸ் எனக்கு சல்யூட் அடிக்கும் என வந்துவிட்டார்
ஆக காவல்துறை கேள்வி கேட்கின்றது, திமுக மேலிடமும் கேட்கின்றது நாமும் பேனரை பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டுவிடலாம்
மாண்புமிகு அமைச்சர் கேள்விபட்டதுண்டு, அதென்ன மாண்புமிகு தளபதி
தளபதிக்கு தேவை வீரமிகு, வேகமிகு பட்டம் அல்லவா?
மாண்புமிகு தளபதி என்றொரு தளபதி உலகில் எந்த மூலையிலாவது உண்டா?
