சிரியாவில் தற்போது சிறிய அமைதி நிலவுவது நல்ல விஷயம்
தீரா போராட்டங்களாகிவிட்ட இடங்கள் சில, அதில் ஹாங்காங்கு ஈராக்கும் வெனிசுலாவும் சிலியும் வருகின்றன
ஹாங்காங் நிலமை வேறு, அவர்களுக்கு போராட்டம் என்றாலும் உணவுக்கோ பணத்துக்கோ சிக்கல் இல்லை வரவேண்டியது சரியாக வருகின்றது
ஆனால் ஈராக்கும் வெனிசுலாவும் எண்ணெய் வளம் மிக்கவை, அவற்றின் வரமும் அது சாபமும் அதுவே
ஈராக்கிய வன்முறைகள் உணவுக்காய் நடப்பவை, அமெரிக்காவின் மறைமுக கரத்தை உடைக்க ஈரானும் ஈராக்கும் சேர்ந்து நடத்தும் நாடகங்கள்
சிரியாவில் இருந்து கிளம்பி ஈராக்கில் நிரந்தரமாக தங்க முயல்கின்றது அமெரிக்கா, இந்த கலவரத்தை அடக்க உள்ளே வரலாமா என கதவை தட்டுகின்றது, ஈராக்கோ நாங்களே பார்த்துகொள்கின்றோம் என ஈரானிடம் உதவி கேட்கின்றது
ஈராக்கும் ஈரானும் சேர்ந்தபின் ஈராக்கில் கலவரம் “தானாக” அதிகரிக்கின்றது என்பதுதான் சோகம்
வெனிசுலாவிலும் அதே ஆட்டம் அங்கு வெனிசுலா அரசும் ரஷ்யாவும் ஒரு அணி, அமெரிக்காவும் குழப்பவாதிகளும் ஒரு அணி, மக்களுக்கு ஜென்ம சனி
இந்த சிலியில் சர்வாதிகாரியினை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் போராட்டமும் தொடர்கின்றது, அவர் விட்டுகொடுப்பதாக தெரியவில்லை
சிரியாவில் தற்போது சிறிய அமைதி நிலவுவது நல்ல விஷயம், இது நிரந்தரமாக தொடர்ந்தால் மிகவும் நல்லது.