இங்காவது சிக்கல் ..
திருகுறளை போல அற்புதமான நீதி நூல்கள் பண்டைய இலக்கியங்களில் உண்டு, நாலடியார் மூதுரை , ஆச்சாரகோவை போன்றவை எல்லாம் அதில் முக்கியமானவை
இன்னும் ஏராளம் உண்டு, அற்புதமான நூல்கள் அவை சீராக் ஆகமும் , சாலமோனும், சாணக்கியனும் கூட சொல்லா தத்துவம் அவை
திருகுறள் சொல்லா விஷயங்களையும் அவை சொல்லும்
ஆனால் திராவிட குஞ்சுகள் அந்த பக்கமே செல்லாது, காரணம் கடவுளை தெய்வத்தை மகா மகா உறுதியாக சொல்லியிருப்பதால் செல்லமாட்டார்கள்
அதை தொட்டால் இந்துமதத்தை தொட வேண்டிவரும் இரண்டையும் பிரிக்க முடியாது என்பதால் அப்பக்கமே செல்லமாட்டார்கள்
குறள் என்பது சிறிய வடிவம் ஜப்பானிய ஹைகூ போல, அதனால் வள்ளுவனும் தெய்வ நம்பிக்கையினை சுருங்க அதில் சொன்னான், அதை மறைப்பதும் குழப்புவதும் எளிது என்பதால் குறளை பிடித்து தொங்கினார்கள்
கம்பனை, இளங்கோவினை , சீத்தலை சாத்தனாரை , புகழேந்தி புலவரை, ஆண்டாளை எல்லாம் இவர்கள் விட்டுவிட்டு வள்ளுவன் என தொங்க இதுதான் காரணம்
இங்காவது சிக்கல் ..
நாடியார் எழுதியவனுக்கும், அவ்வைக்கும், புகழேந்திக்கும் சிலை வைத்தால் சர்ச்சையே இன்றி காவி அடித்துவிடலாம்
நாலடியார் தவிர இதர புலவர்களுக்கு விபூதியும் பூசலாம், நாலடியார் சமண இலக்கியம் என்பதால் சமண அடையாளம் மட்டும் வரும்
கம்பனுக்கு சிலை என்றால் சந்தேகமே இல்லாமல் காவிதான்
ஆக மற்ற எல்லா புலவனுக்கும் மதமும் அடையாளமும் இருக்கும் போது வள்ளுவனை மட்டும் மதமற்ற இனமற்ற அனாமதேய அனாதை ஆக்குவதா சரி?
இதெல்லாம் ஏற்க கூடிய வாதங்களா?
கொஞ்சமேனும் மனசாட்சி வேண்டாமா? 70 வருடமாக சினிமா மயக்கத்தில் ஒரு பொய்யினை சுமந்தால் அதை 7 ஆயிரம் வருடத்துக்கு இழுக்க முடியும் என்றா நம்புவார்கள்