வதந்திகள் இப்படித்தான் கிளம்பும் போல

ஒரு அரைமண்டையன் அல்லது தமிழக வரைபடத்தை கூட ஒழுங்காக தெரியாதவன் தற்போது பாகிஸ்தான் பார்த்து அலறும் புது காஷ்மீரிய வரைபடத்தை அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கபட்டு வெளியிடபட்ட வரைபடத்தை பார்த்து ஏ பாஜக அரசே கார்கில் இப்படியா இங்கேயா வரும் என அலறிகொண்டிருந்தான்

நாமும் முறையான படத்தை காட்டி கார்கில் சிரியா பக்கமா வரும், இங்குதான் வரும் என விளக்கி சொன்னோம்

அவனோ கள் குடித்த குரங்காக சொன்னதையே சொன்னான்,

நாம் சொன்னோம் இது பாகிஸ்தானிய சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரை உள்ளடக்கிய படம் என திரும்பவும் சொன்னோம்

அவனோ கார்கில் எங்கிருக்கின்றது தெரியுமா என அதையே சொன்னான்

ஷப்பா.. எனக்கு தெரிந்தது இவ்வளவுதான் இதற்கு மேல் தெரியவேண்டுமானால் இஸ்லாமாபாத் போ அவர்கள் தரும் மேப்பினை பார்த்துகொள் என்றோம்

அவ்வளவுதான் அவன் எப்படி கிளம்பிவிட்டான் தெரியுமா?

“சங்கி ஸ்டான்லி ராஜன் ,இஸ்லாமியனான என்னை பாகிஸ்தானுக்கு விரட்டுகின்றான், இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா?…”

ஆம், வதந்திகள் இப்படித்தான் கிளம்பும் போல