அடுத்த உலக கோப்பையினையாவது வென்றுவரட்டும்

ஆட வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் உடனே பெவிலியன் வந்துவிடுபவரும், அவ்வளவு முக்கியமில்லா ஆட்டங்களில் ஆடி தீர்த்து சாதனைகளை செய்பவருமான விராட் கோலி எனும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள்

நிச்சயம் நல்ல ஆட்டக்காரர், சந்தேகமில்லை. ஆனால் அவரின் ஆட்டம் பொறுப்பாக அமையுமா என்றால் இல்லை

நெருக்கடி நிலை என்றால் டக்கென விழுந்துவிடுவார், நெருக்கடி இல்லா ஆட்டங்களில் மட்டும் ஜொலிப்பார்

எப்படியாயினும் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்குபவராக அவர்தான் நோக்கபடுகின்றார், ஒரு இந்தியனின் சாதனையினை இன்னொரு இந்தியன் உடைப்பதுதான் சரி

உலகின் பிரமாதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் என கருதபடும் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

அடுத்த உலக கோப்பையினையாவது வென்றுவரட்டும்