இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?

இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?

சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடுமா? இல்லை பேனா மூடி தொலைந்துவிட்டால் மளிகை கடை மூடபடுமா?

விஜய் சேதுபதி இல்லை என்றாலும் இன்னொருவன் இந்த விளம்பரத்தை செய்வான், அட அவனே இல்லை என்றாலும் மண்டி மக்களை தனாக சென்றடையும்

ஒருவேளை போராடுவதாக இருந்தால் மண்டி அலுவலகம் எங்கிருக்கின்றதோ அங்கு சென்று போனை உடைத்து போராடவேண்டும் அதுவுமில்லை

டிஜிட்டல் தராசு வந்து இரும்பு தராசும் படிகல்லும் காணாமல் போய் அந்த தொழிலே இன்று இல்லை, அதுபற்றி இக்கூட்டம் பேசுமா?

இவர்கள் தொடர்புடைய தொழிலே சணல் உட்பட அழிந்தது ஏராளம் அப்பொழுதெல்லாம் கனத்த அமைதி..

எவன் செத்தாலும் எந்த தொழில் அழிந்தாலும் அமைதி, ஆனால் இவர்களுக்கு ஒன்று என்றால் ஆர்ப்பாட்டம் அழிச்சாட்டியம்

கிரண்டர் வந்தபின் அம்மிகல் கொத்துவோர் போராடுவது போல, டிராக்டர் வந்தபின் மாட்டு உழவுக்காரர்கள் போராடுவது போல அர்த்தமில்லாமல் போராடி கொண்டிருக்கின்றது வணிகர் சங்கம்

இதை எல்லாம் தடுக்கவே முடியாது, அடுத்துவரும் மண்டி 2.0 இதைவிட மோசமானதாக இருக்கும் என்பதால் வியாபார புலிகள் வேறு திட்டம் தீட்டுவதுதான் நல்லது