இந்தியா அதில் இணையாது

Regional Comprehensive Economic Partnership (RCEP) ‘ஆர்செப்’ எனப்படும், 16 நாடுகள், சீனா ஜப்பான் தென்கொரியா ஆஸ்திரேலியா என கிழக்காசிய நாடுகள் 16 அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி கேட்டுகொள்ளபட்டதை மோடி மறுத்து இந்தியா அதில் இணையாது என சொல்லிவிட்டார்

ஒருவகையில் அது நல்லதும் கூட‌

1990களில் மன்மோகன் சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயத்தினை அனுமதித்தார், எல்லோரும் எதிர்த்தனர் ஆனால் அவரும் சிதம்பரமும் கண்டுகொள்ளவில்லை, விளைவு விலைவாசி எகிறி என்னவெல்லாமோ நடந்து நாட்டின் பணவீக்கம் பெருகியது

சிலர் சொல்வார்கள் அதன் பின்புதான் பொருளாதாரம் பெருகிற்று என்பார்கள் அது உண்மையில் வீக்கம் , இதனால் அழிந்துபோன உள்ளூர் தொழில் ஏராளம்

மோடி கிழக்காசியாவுக்கு இந்தியாவினை திறந்துவிட முடியாது வேண்டுமானால் அந்நாடுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து இங்கேயே தயாரித்து எம் மக்களுக்கு தொழில்வாய்ப்பு கொடுக்கட்டும் என சொல்லிவிட்டார்

இந்த நகர்வு நிச்சயம் சரியானது, காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்யவில்லை என்பது வாழ்த்துகுரியது..