பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது
பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது , மத தலைவர்கள் பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் ராணுவம் யார் பக்கம் சரிகின்றது என்பதுதான் கவனிக்க வேண்டியது
மவுனாலா ரகுமான் தலமையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இம்ரான்கான் ஒருபக்கம், ராணுவம் மறுபக்கம் மவுனாலா ரகுமான் மறுபுறமும் முக்கோணத்தில் நிற்கின்றார்கள்
மவுனாலா ரகுமான் ஆட்சிக்கு வர நினைக்கின்றார், வந்தால் அவரும் எம் அடிமைதானே என சிரிக்கின்றது ராணுவம்
மிக குழப்பமான நிலை நீடிக்கின்றது அடுத்து அங்கு யார் ஆட்சி என்பது சொல்லமுடியாது, ஆனால் இம்ரான்கான் விரைவில் விரட்டபடுவார் என்பது மட்டும் நிஜம்
இதற்கு காரணம் மோடி, பாகிஸ்தானில் அரசியல் குழப்பத்தை தொடங்கி வைத்தவர் மோடி என யாராவது வந்தால் நாம் ஒன்றும் சொல்லமுடியாது
இதெல்லாம் அவர்களின் உள்நாட்டு சிக்கல், வெளிநாட்டு சக்தி சிலவும் இம்ரானை விரட்ட நினைக்கின்றன. அரபு நாடுகளும் இம்ரானை கைவிட்டதில் அவருக்கு ஏக சிக்கல்கள்
அடுத்து ராணுவ ஆட்சி ஒரு பொம்மையின் கீழ் நடக்கலாம் என்பது ஆரூடம்
விரைவில் இம்ரான்கான் நாட்டைவிட்டே விரட்டபடலாம், அப்படியானால் எங்கே செல்வார்? ஒருவேளை அறிவாலயம் வரலாம்..
