சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல்
மஹராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என இந்தியா பார்ப்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிட்டதுதான் சோகம்
செல்லுமிடமெல்லாம் பெரும் புள்ளிகளை பார்த்து நீங்கள் ஏன் இந்தியாவில் தொழில் தொடங்க கூடாது என பேசி இழுத்துவருவது மோடி பாணி அல்லது ஒரே வேலை
அப்படி சவுதி அரேபியாவினையும் பெரும் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தை இந்தியாவில் அமைக்க அழைத்துவந்தார்
பெரும் பில்லியன் டாலரில் அதாவது 65 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது
இதில் சவுதியும் அமீரகமும் இந்தியாவும் கூட்டாக முதலீடு செய்யும், இந்தியா நிலமும் கொடுக்க வேண்டும் மின்சாரம் உட்பட பலவும் கொடுக்கவேண்டும் என்பது ஒப்பந்தம்
இப்பொழுது எல்லாம் ரெடி, சவுதியும் அமீரகமும் கையில் செக்கோடு மோடியினை நெருக்குகின்றன, ஆனால் மோடி என்ன பதில் சொல்ல என தவிக்கின்றார்
அட்லீஸ்ட் நிலத்தையாவது காட்டுங்கள் மோடி என அவை கேட்கும் பொழுதும் மோடியிடம் பதில் இல்லை
ஆம் அந்த நிலையம் மஹாராஷ்ட்ராவில் அமைப்பதுதான் திட்டம், ஆனால் மகராஷ்ட்ராவில் யார் ஆட்சி அமைப்பது என தெரியாமல் இழுப்பதில் மோடிக்கும் பதில் சொல்ல தெரியவில்லை
மோடிக்கு அவை போன் செய்தால் “அய்யா தாய்லாந்துல திருகுறள் படிக்கிறாக. அய்யா ரஷ்ய அதிபரோட பேசுறாக.. அய்யா ஜப்பானுக்கு கிளம்புறாக” என்ற பதில் மட்டும் வருகின்றதாம்
இனி அங்கு ஆட்சி அமைந்து, பெரும்பான்மை நிரூபிக்கபட்டு அதன்பின் நிலம் தேடபட்டு.. இது நடக்கும் கதைபோல் தெரியவில்லை என சவுதியும் அமீரகமும் உதட்டை கடிக்கின்றன
65 பில்லியன் டாலர் முதலீடு வரும் சூழலில் மகராஷ்ட்ராவில் ஏன் இழுபறி என்பது உங்கள் ஊக கணக்கு, நாம் ஒன்றும் சொல்லமுடியாது
சரி மகராஷ்ட்ராவில் சிக்கலாகும் பொழுது நம் முதல்வர் பழனிச்சாமி இந்த 65 பில்லியன் முதலீட்டை தட்டி வந்தால்தான் என்ன?
உலகெல்லாம் முதலீட்டுக்கு ஓடும் பழனிச்சாமி இதை ஏன் இங்கு இழுத்துவரவில்லை என்பதை எல்லாம் நாம் கேட்க கூடாது
அவருக்கு முக ஸ்டாலினுடன் மல்லுகட்ட வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் வெல்வது எப்படி என கணக்கு பார்க்க வேண்டும் உட்பட ஏக வேலைகள் இருப்பதால் இந்தியாவில் கண்முன் கிடக்கும் 65 பில்லியன் முதலீட்டை தேடமாட்டார்
மாறாக ஐரோப்பா அமெரிக்கா என தேடுவார்
இதில் இன்னொரு கோணமும் உண்டு, 65 பில்லியன் டாலர் முதலீடு மோடிவழியாக வந்தால் அதிமுக கோஷ்டிக்கு சல்லி வருமானமும் வராது என்பது அது. பின் எப்படி அதை இங்கே இழுத்து வருவார்கள்?
அதையும் மீறி வந்தால் சுற்றுபுற காவலர்கள் விடுவார்களா? கப்பலில் எண்ணெய் கொட்டியபொழுது வாளியால் அள்ளிய அரசு இதை எப்படி கவனிக்கும், கடற்கரையினை ஒழிக்க வந்த அரபுகாரன் ஒழிக என கிளம்புவார்கள்
